யார் இந்த பாபு?.... டிடிவி தினகரன் ஜாமீன் மனு விசாரணையில் புதிய தகவல்!

பாஸ்போர்ட் நீதிமன்றத்தில் இருப்பதால் தன்னால் வெளிநாடுகளுக்கு செல்ல முடியாது....

டிடிவி தினகரன் ‘இரட்டை இலை’ சின்னத்தை மீட்பது தொடர்பாக தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைதாகி, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், ‘விசாரணைகளின் போது அதிகாரிகளுக்கு ஒத்துழைத்து வருவதாகவும், பாஸ்போர்ட் நீதிமன்றத்தில் இருப்பதால் தன்னால் வெளிநாடுகளுக்கு செல்ல முடியாது’ என்று குறிப்பிட்டும், டிடிவி தினகரனின் டெல்லி நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி நேற்று மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இதனையடுத்து, இந்த ஜாமீன் மனு மீதான விசாரணையை வரும் மே 22 ஆம் தேதிக்கு டெல்லி நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. மேலும், தினகரனின் நண்பர் மல்லிகார்ஜுனாவின் ஜாமீன் மனுவையும் அதே தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.

இந்த விசாரணையின் போது, ‘இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் தர முயன்ற புகாரில், பாபு என்கிற மேலும் ஒருவர் கைதாகியுள்ளார்’ என்று அரசு தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.

×Close
×Close