தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளராக அனிதா ராதா கிருஷ்ணன் நியமனம்

சுப்பிரமணியன், மாநில விவசாய தொழிலாளர் அணி செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்த என்.பெரியசாமி, சமீபத்தில் மரணம் அடைந்தார். இதையடுத்து தூத்துக்குடி மாவட்ட திமுகவில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். தூத்துக்குடி தெற்கு மாட்டத்திற்குள் திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், ஓட்டப்பிடாராம் மூன்று சட்டமன்ற தொகுதிகள் அடங்கும்.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக தூத்துக்குடி எம்.எல்.ஏ.வும் என்.பெரியசாமியின் மகளுமான கீதா ஜீவன் நியமிக்கப்பட்டுள்ளார். வடக்கு மாவட்டத்தில் தூத்துக்குடி, கோவில்பட்டி, விளாத்திக்குளம் ஆகிய சட்டமன்ற தொகுதிகள் அடங்கும்.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்த சுப்பிரமணியன், மாநில விவசாய தொழிலாளர் அணி செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த அறிவிப்பை திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ளார்.

×Close
×Close