Advertisment

குடும்ப கட்டுப்பாட்டு திட்டத்தின் ஹீரோ- டி .வி. அந்தோணி காலமானார்.

T.V. Antony died : தமிழக அரசின் முன்னாள் தலைமை செயலாளர் டி.வி.அந்தோணி (86). உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
tv antony ias dead, tv antony ias, MK Stalin, family planning

tv antony ias dead, tv antony ias, MK Stalin, family planning

தமிழக அரசின் முன்னாள் தலைமை செயலாளர் டி.வி.அந்தோணி (86). உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.

Advertisment

.1956-ஆம் ஆண்டு இந்திய ஆட்சிப் பணியில் இணைந்த டி.வி.அந்தோணி, மதுரை, திருநெல்வேலி, தஞ்சாவூா் மாவட்டங்களின் ஆட்சியராக பதவி வகித்துள்ளார்.1973ம் ஆண்டில் சென்னை மாநகராட்சியின் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார். 1981 மற்றும் 1985 ஆகிய ஆண்டுகளில் தமிழக தலைமை செயலாளராக இருந்தார். 1991ம் ஆண்டு ஓய்வுபெற்ற பின் மாநில திட்ட கமிஷனின் தலைவராகவும் பணியாற்றினார். அவர் பணியில் இருந்த சமயத்தில் குடும்ப கட்டுப்பாடு திட்டத்தை திறன்பட செயல்படுத்தினார். பத்மபூஷண் விருதும் பெற்றுள்ளார். அவரது தந்தையான டி.ஏ.வா்கீஸ், தமிழக தலைமைச் செயலாளராக இருந்தவா் என்பது குறிப்பிடத்தக்கது.

பேரறிஞர் அண்ணா அவர்கள் முதலமைச்சராகப் பொறுப்பேற்றிருந்த காலகட்டத்தில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவராகவும், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்த நேரத்தில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவராகவும் பணியாற்றி- பல்வேறு ஊரக வளர்ச்சிப் பணிகளுக்கு முன்னோடியாக விளங்கியவர்.

சென்னை மாநராட்சியின் சிறப்பு அதிகாரியாகவும் பணியாற்றி- கிராமப்புற மற்றும் நகர்ப்புற நிர்வாகத்தில் முத்தான திட்டங்களை நிறைவேற்றக் காரணமாக இருந்தவர். தலைமைச் செயலாளராக இருந்த நேரத்தில் பெண்ணுரிமைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தவர். மாநிலத்தில் குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தை செம்மையாக செயல்படுத்துவதில் முனைப்பு காட்டியவர். மகளிர் மேம்பாட்டிற்காகப் பாடுபட்டதற்காகவும் அவரது நிர்வாகத் திறமையைப் பாராட்டியும் மத்திய அரசே “பத்மபூசன்” விருதினை வழங்கிச் சிறப்பித்ததை இந்த நேரத்தில் நினைவு கூர்ந்திட விரும்புகிறேன். ஐ.சி.எஸ். குடும்பத்திலிருந்து இந்திய ஆட்சிப்பணியில் சேர்ந்தாலும்- அடித்தட்டு மக்களின் உணர்வுகளை, தேவைகளை அறிந்து- மாநில திட்டக்குழு உள்ளிட்ட அரசின் பல்வேறு நிலைகளில் சிறப்பாகப் பணியாற்றி- தமிழகத்தின் முன்னேற்றத்திற்குப் பாடுபட்ட ஒரு அனுபவமிக்க, நேர்மையான, திறமையான அதிகாரியின் மறைவு தமிழகத்திற்கு பேரிழப்பு என்று திமுக தலைவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மறைந்த டி.வி.அந்தோணிக்கு மனைவி, இரண்டு மகன்கள் உள்ளனா். அந்தோணியின் இறுதி நிகழ்வுகள் வரும் திங்கள்கிழமை நடைபெறவுள்ளன.

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment