Advertisment

மாணவர்களை மதம் மாற்ற முயற்சி; 2 ஆசிரியர்கள் பணியிடை  நீக்கம்

ஈரோடு மாவட்டத்தில் மாணவர்கள் சிலரை இந்து மதத்திலிருந்து கிறிஸ்தவ மதத்திற்கு மாற்ற முயற்சித்ததாக கூறி அரசு பள்ளி ஆசிரியர்கள் 2 பேரை மாவட்ட நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்துள்ளது. மாவட்ட கல்வி அலுவலர் (டி.இ.ஓ) மாதேஸ்வரன் விசாரணைக்குப் பிறகு அவர்களுக்கு பணியிடை நீக்கம் உத்தரவு வழங்கினார்.

author-image
WebDesk
New Update
two government teachers suspended, two government teachers suspended for trying to convert kids, மாணவர்களை மத மாற்றம் செய்ய முயற்சி, 2 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம், மாவட்ட கல்வி அலுவலர் நடவடிக்கை, teachers trying converts school students religion, ஈரோடு மாவட்டம், erode district, sellathapalayam, deo action against 2 teachers

ஈரோடு மாவட்டத்தில் மாணவர்கள் சிலரை இந்து மதத்திலிருந்து கிறிஸ்தவ மதத்திற்கு மாற்ற முயற்சித்ததாக கூறி அரசு பள்ளி ஆசிரியர்கள் 2 பேரை மாவட்ட நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்துள்ளது. மாவட்ட கல்வி அலுவலர் (டி.இ.ஓ) மாதேஸ்வரன் விசாரணைக்குப் பிறகு அவர்களுக்கு பணியிடை நீக்கம் உத்தரவு வழங்கினார்.

Advertisment

ஈரோடு மாவட்டம், செல்லாத்தாபாளையம் அரசு ஊராட்சி ஒன்றிய பள்ளியில் ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களை மதமாற்றம் செய்ய முயற்சித்ததாகக் கூறி பாஜகவைச் சேர்ந்த மொடக்குறிச்சி ஒன்றிய செயலாளர் சுந்தர நாராயணன், அக்டோபர் 9ம் தேதி மாவட்ட ஆட்சியர் கதிரவனிடம் புகார் அளித்தார். இந்த புகாரைத் தொடர்ந்து, மாவட்ட கல்வி அலுவலர் மாதேஸ்வரன், செல்லாத்தாபாளையம் ஊராட்சி ஒன்றிய அரசு பள்ளியில்,  மாணவர்களை மதமாற்றம் செய்ய முயற்சித்த ஆசிரியர், உதவி தலைமை ஆசிரியை 2 பேர்களை பணியிடை நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளார்.

இது குறித்து, பாஜகவை சேர்ந்த சுந்தர நாராயணன்,  “உதவித் தலைமையாசிரியர் அருள் மணி மற்றும் ஆசிரியர் சரண்யா ஆகியோர் பள்ளியில் உள்ள மாணவர்களுக்கு மத புத்தகங்கள் மற்றும் குறுந்தகடுகளை வழங்க முயற்சித்தனர்” என்று புகார் அளித்துள்ளார்.

மாவட்ட ஆட்சியர் இந்த புகார் மனுவை மாவட்ட கல்வி அலுவலருக்கு அனுப்பினார். மாவட்ட கல்வி அலுவலரின் விசாரணையின் போது, டி.இ.ஓ ஆசிரியர்களின் அலுவலகங்களில் இருந்து, கிறிஸ்தவம் தொடர்பான புத்தகங்கள், சுவரொட்டிகள் மற்றும் குறுந்தகடுகளை பறிமுதல் செய்தார். மேலும், டி.இ.ஓவும் அந்த அறிக்கையை உயர் அதிகாரிகளிடம் சமர்ப்பித்து துறை சார்ந்த விசாரணைக்கு உத்தரவிட்டார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment