Advertisment

மலேசிய மஞ்சுவா? திருநெல்வேலி ஷாலினியா? ஹரி நாடாருக்காக முட்டும் 2 பெண்கள்

நடமாடும் நகைக்கடையாக வலம் வந்த ஹரி நாடார் மோசடி வழக்கில் பெங்களூரு சிறையில் இருந்த நிலையில், விஜயலட்சுமி வழக்கில் சென்னை போலீசார் அவரை கைது செய்தனர். தற்போது ஹரி நாடாருக்காக 2 பெண்கள் போட்டிபோட்டு வருகின்றனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
two women competition for Hari Nadar, Hari Nadar, ஹரி நாடார், ஹரி நாடாருக்காக போட்டிபோடும் 2 பெண்கள், மலேசிய மஞ்சு, திருநெல்வேலி ஷாலினி, ஹரி நாடார் மனைவிகள், சிறையில் ஹரி நாடார், Hari Nadar's wife, who is wife of Hari Nadar, Hari Nadar case, Hari Nadar in jail

தமிழ்நாட்டில் நடமாடும் நகைக்கடையாக உடல் முழுவதும் நகைகளுடன் வலம் வந்த ஹரி நாடார் மோசடி வழக்கில் பெங்களூரு சிறையில் இருந்த நிலையில், விஜயலட்சுமி வழக்கில் சென்னை போலீசார் அவரை கைது செய்தனர். தற்போது ஹரி நாடாருக்காக 2 பெண்கள் போட்டிபோட்டு வருகின்றனர்.

Advertisment

ஹரி நாடார் என்றாலே தமிழக மக்களுக்கு உடனடியாக நினைவுக்கு வருவது உடல் முழுவதும் கிலோக் கணக்கில் அவர் அணிந்திருக்கும் தங்க நைகைகள்தான். அதனாலேயே, அவரை நடமாடும் நகைக் கடை என்று அழைத்தனர். சினிமா பைனான்ஸியராகவும் பனங்காட்டுப் படை கட்சி சார்பில் ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு 37 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்றார். அதுமட்டுமில்லாமல், சினிமாவில் ஹீரோவாக நடிக்கவும் தொடங்கி பூஜைபோட்டு படப்பிடிப்பும் தொடங்கப்பட்டது.

இந்நிலையில்தான், பெங்களூருவைச் சேர்ந்த வெங்கடராமன் சாஸ்திரி உள்ளிட்டோரிடம் கடன் தருவதாக 16 கோடி மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இதனைத் தொடர்ந்து பல நாட்கள் தேடுதல் வேட்டைக்கு பிறகு பெங்களூர் போலீசாரால் ஹரி நாடார் கைது செய்யப்பட்டு பெங்களூர் பார்ப்பன அக்ரஹார சிறையில் அடைக்கபபட்டார்.

முன்னதாக, சினிமா நடிகையான விஜயலட்சுமி, தன்னை நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நம்ப வைத்து ஏமாற்றியதாக வீடியோ வெளியிட்டார். மேலும், கடந்த 2020ம் ஆண்டு அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜயலட்சுமியிடம் மேஜீஸ்ட்ரேட் வாக்குமூலம் பெற்றார்.

மருத்துமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட விஜயலட்சுமி, காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்டஹர். அதில், தனக்கு உடல் நிலை சரியில்லாத நிலையிலும் சிலரின் தூண்டுதல் காரணமாக என்னை மருத்துவமனையில் இருந்து வெளியேற்றிவிட்டனர். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்காக ஹரி நாடார் தன்னை மிரட்டுவதாகவும், இது தொடர்பாக சீமான், ஹரி நாடார், மற்றும் சதா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

விஜயலட்சுமி அளித்த புகாரில், பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருந்த ஹரி நாடாரை சென்னை போலீசார் கைது செய்தனர். அவரை போலீசார், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது நகைகள் எதுவும் இல்லாமல் சாதாரணமாக இருந்தார். தற்போது ஹரி நாடார் சைதாப்பேட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சினிமா பைனான்சியர், சினிமா நடிகர், நடமாடும் நகைக்கடை, பனங்காட்டுப் படை கட்சி பிரபலம் என்று பந்தாவாக வலம் வந்த ஹரி நாடாரை மோசடி வழக்கில் பெங்களூரு போலீசார் கைது செய்து அவருடைய நகைகளையும் பறிமுதல் செய்தனர். அதோடு அவருடைய அனைத்து வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன.

ஹரி நாடார் தற்போது வழக்கு நடத்துவதற்கு செலவுக்குகூட பணம் இல்லாமல் தவித்து வருவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதுமட்டுமில்லாமல், அவர் பனங்காட்டுப் படை கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

கிலோ கணக்கில் நகைகளை அணிந்து பந்தாவாக வலம் வந்த ஹரி நாடார் சிறையில் உள்ள நிலையில், அவருடைய முதல் மனைவி ஷாலினி திருநெல்வேலி காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்துள்ளார். அதில் அவர் பல அடுக்கடுக்கான புகார்களை தெரிவித்துள்ளார்.

ஷாலினி அந்த புகாரில், 2011ம் ஆண்டில் கேரளாவில் உள்ள துணிக்கடை ஒன்றில் வேலை செய்தபோது, தன்னுடன் வேலை செய்த ஹரி என்பவரை திருமணம் செய்துகொண்டதாகவும் அவருக்கும் தனக்கும் பிறந்த ஒரு மகன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அவர் சென்னையில் பைனான்ஸ் தொழிலில் ஈடுபட்டு வசதி வாய்ப்புகள் பெருகிய பின்னர், தன்னையும் மகனையும் கவனிக்காமல் விட்டுச் சென்றதாகவும் கூறினார்.

இதனைத் தொடர்ந்து, தன்னை தொடர்பு கொண்ட மலேசியாவைச் சேர்ந்த மஞ்சு என்ற பெண் தன்னை ஹரியின் மனைவி என்று கூறியதோடு தங்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். அதனால், ஹரியை மறந்துவிடுமாறு மிரட்டியதாக தெரிவித்துள்ளார்.

மேலும், அந்த புகாரில் ஷாலினி கூறியிருப்பதாவது, ஹரி மஞ்சுவின் கட்டுப்பாட்டில் இருந்துகொண்டு தன்னை விவாகரத்து செய்ய முயன்றதாகவும் அதற்கு தான் சம்மதிக்காததால் அது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருவதாக தெரிவித்துள்ளார்.

ஹரி நாடார் கேரளாவில் மஞ்சுவுடன் இருக்கும்போது, பெங்களூரு போலீசார் அவரை பிடித்துச்சென்றனர். அதனால, போலீசார் மஞ்சுவை ஹரியின் மனைவியாக தவறாக பதிவு செய்தனர். அதனால், ஹரி பெங்களுரு பரப்பன அக்ரஹார சிறையில் இருந்தபோது தனது கணவரை சந்திக்க மனு அளித்தும் தன்னால் பார்க்க முடியவிலலி என்று தெரிவித்துள்ளார்.

தற்போதுகூட, மலேசியா மஞ்சு, தன்னை செல்போனில் மிரட்டி வருவதாகவும் அவரிடம் இருந்து தனது கணவர் ஹரியை மீட்டு தன்னுடன் சேர்த்து வாழ வைக்க வேண்டும் என்று ஷாலினி அந்த புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.

உடல் முழுவதும் கிலோக் கணக்கில் நகைகளுடன் நடமாடும் நகைக்கடையாக பந்தாவாக வலம் வந்த ஹரி நாடார், மோசடி வழக்கில், பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து சென்னை சைதாப்பேட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பெரிய தொகையாக பிணை கேட்பதால், சிறையில் இருந்து வெளியே வரமுடியாமல் சிக்கி தவிக்கும் ஹரி நாடாருக்காக திருநெல்வேலியைச் சேர்ந்த ஷாலினியும், மலேசியாவைச் சேர்ந்த மஞ்சுவும் அவர் தனது கணவர்தான் போட்டி போட்டு முட்டுவது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Tamilnadu Hari Nadar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment