Advertisment

தியாகவாழ்வுக்குச் சொந்தக்காரர் சங்கரய்யா : முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

Tamil News Update : சுதந்திர போராட்டக்காரரும், கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான சங்கரய்யாவின் 100-வர் பிறந்த நாளை முன்னிட்டு தலைவர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

author-image
WebDesk
New Update
தியாகவாழ்வுக்குச் சொந்தக்காரர் சங்கரய்யா : முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

Tiyagi Sankaraiah 100th Birthday Update : 1922-ம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆத்தூரில் பிறந்தவர் சங்கரய்யா. சுதந்திர போராட்டகார்ர்களில் நூற்றாண்டு கடந்தவர் என்ப பெருமை பெற்றுள்ள இவர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பழம்பெரும் தலைவராக போற்றப்படுகிறார். 1938-ம் ஆண்டு சென்னை மற்றும் அண்ணாமலை பல்கலை கழக மாணவர்களை ஒன்றிளைத்து மாணவர் சங்கத்தை நிறுவிய இவர் அந்த சங்கத்தின் தலைவராக பொறுப்பேற்று சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டார்.  தனது கல்லூரி காலத்தில்  சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட இவர், 1940-ம் ஆண்டு மதுரையில் உதயமான கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை உறுப்பினராக இணைத்துக்கொண்டார்.

Advertisment

சுதந்திரம் கிடைத்த பின்பு, இந்தியாவில் 1957 & 1962-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற இந்தியப் பொதுத் தேர்தல்களில் இவர் மதுரை கிழக்குத் தொகுதியில் போட்டியிட்டார்.  ஆனால் அந்த தேர்தலில் தோல்வியை தழுவிய அவர், தொடர்ந்து 1967ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் மதுரை மேற்குத் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு‍ மாநிலக்குழுவின் 15 ஆவது‍ மாநிலச் செயலாளராகவும், இந்திய பொதுவுடைமை இயக்கத்தின் மூத்த தலைவரும் செயல்பட்ட இவர்,. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்‌க்சிஸ்ட்) 36 தலைவர்களில் ஒருவராக உள்ளார்.

1986ஆம் ஆண்டில் கொல்கத்தாவில் நடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 12வது மாநாட்டில் கட்சியின் இவர் மத்தியக் குழுவிற்குத் தேர்வுசெய்யப்பட்டார். அப்போதிலிருந்து தொடர்ந்து மத்தியக் குழுவில் இருந்து வருகிறார். 1995  ஆண்டு முதல் 2002ஆம் ஆண்டு வரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலராகத் தேர்வுசெய்யப்பட்டார். 1982 முதல் 1991 முடிய விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவராக சங்கரய்யா தேர்வுசெய்யப்பட்டார்.  தற்போது சங்கரையா இன்று தனது 100-வது பிறந்த நாளில் அடியெடுத்து வைக்கிறார். அவருக்கு அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில், தியாகவாழ்வுக்குச் சொந்தக்காரரான சங்கரய்யா அவர்களின் நூறாவது பிறந்தநாளில் அவரை நேரில் சந்தித்து அனைவரின் சார்பாக வாழ்த்துகளை வழங்கி மகிழ்ந்தேன்! அவர் பல்லாண்டுகள் நலமுடன் வாழ்ந்து என்னைப் போன்றவர்களுக்கு பொதுவாழ்க்கைப் பயணத்தில் வழிகாட்டிட வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

எதிர்கட்சி தலைவர்எடப்பாடி பழனிச்சாமி தனது ட்விட்டர் பதிவில், சுதந்திர போராட்ட வீரர், உழைப்பாளிகளின் உற்ற தோழர், கொண்ட கொள்கையில் பிடிப்புடன் இருப்பவர், மூத்த கம்யூனிஸ்ட் தலைவர், இன்று 100வது அகவையில் தடம் பதிக்கும் திரு.சங்கரய்யா அவர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் தனது டவிட்டர் பதிவில், விடுதலைப்‌ போராட்ட வீரரும்‌, மார்க்சிஸ்ட்‌ கம்யூனிஸ்ட்‌ கட்சியின்‌ மூத்தத்‌ தலைவரும்‌, உழைப்பாளர்களின்‌ உற்றத்‌ தோழனாக இருந்து பல போராட்டங்களை நடத்தியவரும்‌, தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக திறம்பட பணியாற்றியவரும்‌, எளிமையின்‌ உருவமாகவும்‌, பண்பின்‌ அடையாளமாகவும்‌ விளங்குகின்ற, திரு. என்‌. சங்கரய்யா அவர்கள்‌ இன்று நூறாவது அகவையில்‌ அடியெடுத்து வைத்திருப்பது எனக்கு மிக்க மகிழ்ச்சியை அளிக்கிறது. அன்னாரின்‌ பிறந்த நாளான இன்று அவருக்கு எனது மரியாதையினையும்‌, வணக்கத்தினையும்‌ தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌ என பதிவிட்டுள்ளார்.

அம்முக பொதுக்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பதிவில், சுதந்திர போராட்ட வீரரும், முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவருமான பெரியவர் திரு.என்.சங்கரய்யா அவர்கள் 100வது வயதில் அடியெடுத்து வைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அவருக்கு என் மனப்பூர்வமான வாழ்த்துகள். ஏற்றுக்கொண்ட கொள்கையிலிருந்து வழுவாமல் இத்தனை ஆண்டுகள் தொடர்ச்சியாக பயணித்து இளைய தலைமுறைக்கு முன்மாதிரியாக திகழும் அவர் இன்னும் பல ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழ்ந்திட இறைவனை வேண்டுகிறேன் என பதிவிட்டுள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது ட்விட்டர் பதிவில், நூற்றாண்டு பிறந்தநாள் காணும் முதுபெரும் தலைவர் ஐயா சங்கரய்யா அவர்களை வணங்கி, எனது உளப்பூர்வமான பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் மகிழ்வடைகிறேன் என பதிவிட்டுள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பதிவில், வறுமையின் நிறம் சிவப்பு அல்ல; வறுமையைப் போக்க வந்த நிறமே சிவப்பு’ என முழங்கிய தோழர் என்.சங்கரய்யா 100-வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். விடுதலைப்போர் துவங்கி இன்று வரை நீளும் நெடிய போராட்ட வரலாற்றினைக் கொண்ட முன்னுதாரண தோழருக்கு என் வந்தனங்களும் வாழ்த்துக்களும் என பதிவிட்டுள்ளார்.

இது குறித்து உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில், முத்தமிழறிஞரின் நண்பர், மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் மீது பேரன்பு கொண்டவர், இந்திய அரசியல்-பொதுவுடைமை இயக்கத்தின் மூத்த தலைவர். தோழர் சங்கரய்யா அவர்களின் நூறாவது பிறந்த நாளில் அவர் பணிகளை போற்றுவோம்.பொதுவாழ்வில் எளிமையும்-உறுதியும் கொண்டு வாழும் தோழர் அவர்களின் புகழ் பரவட்டும் என பதிவிட்டுள்ளார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu Tamil News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment