scorecardresearch

புதன்கிழமை உதயநிதி அமைச்சராக பதவி ஏற்பு: தமிழக ஆளுனர் மாளிகை அதிகாரபூர்வ அறிவிப்பு

தி.மு.க இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ-வுமான உதயநிதி ஸ்டாலின் டிசம்பர் 14ம் தேதி அமைச்சராக பதவியேற்க உள்ளார் என்பதை தமிழக ஆளுநர் மாளிமை அதிகார்ப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Tamil news
Tamil news updates

தி.மு.க இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ-வுமான உதயநிதி ஸ்டாலின் டிசம்பர் 14ம் தேதி அமைச்சராக பதவியேற்க உள்ளார் என்பதை தமிழக ஆளுநர் மாளிமை அதிகார்ப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தி.மு.க இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ-வுமான உதயநிதி புதன்கிழமை (டிசம்பர் 14) விளையாட்டுத் துறை அமைச்சராக பதவியேற்க உள்ளார் என்று செய்திகள் வெளியானது.

உதயநிதி விளையாட்டுத் துறை அமைச்சராக பதவியேற்க உள்ளதால் கோட்டையில் 2வது மாடியில் உதயநிதிக்கான அறை தயாராகி வருகிறது. உதயநிதி அமைச்சராக உள்ளதால், பிரபலங்கள் பலரும் அவருக்கு முன் கூட்டியே வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், உதயநிதி ஸ்டாலின் புதன்கிழமை அமைச்சராக பதவியேற்க உள்ளதை தமிழ்நாடு ஆளுநர் மாளிகை அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளது.

சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் டிசம்பர் 14-ம் தேதி அமைச்சராக பதவி ஏற்க உள்ளதாகவும் அவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி பிரமாணம் செய்து வைக்க இருப்பதாகவும் ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது. ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பார் ஹாலில் உதயநிதியின் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. புதன்கிழமை (டிசம்பர் 13) காலை 9.30 மணிக்கு உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்கிறார். பதவி பிரமாண நிகழ்ச்சியில் பங்கேற்க 400 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Udhayanidhi takes oaths as minister on wednesday raj bhavan officially announced