Advertisment

உடுமலை சங்கர் கொலை வழக்கு: 5 பேரின் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைப்பு!

மூன்று பேர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து காவல் துறை தரப்பிலும் மேல் முறையீடு

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
உடுமலை சங்கர் கொலை வழக்கு: 5 பேரின் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைப்பு!

udumalaipettai shankar case judgement : உடுமலைபேட்டை சங்கர் கொலை வழக்கில், முக்கிய எதிரியான கவுசல்யாவின் தந்தை சின்னசாமிக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. மேலும் ஐந்து பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து தீர்ப்பளித்தது.

Advertisment

கவுசல்யாவின் தாய் அன்னலட்சுமி உள்பட மூன்று பேரின் விடுதலையை உறுதி செய்தும் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், பழனியைச் சேர்ந்த கவுசல்யா, கல்லூரியில் தன்னுடன் படித்த மாற்று ஜாதியைச் சேர்ந்த சங்கர் என்பவரை கடந்த 2015ம் ஆண்டு பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துகொண்டார்.இந்த தம்பதிக்கு கவுசல்யாவின் பெற்றோர் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வந்ததாகக் கூறப்பட்ட நிலையில், கடந்த 2016ம் ஆண்டு மார்ச் மாதம் 13ம் தேதி கவுசல்யாவையும், அவரது கணவர் சங்கரையும், உடுமலைப்பேட்டை பேருந்து நிலையத்தில் மூன்று பேர் கும்பலால் சரமாரியாக வெட்டியது.

இதில் சங்கர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், பலத்த காயங்களுடன் கவுசல்யா உயிர் தப்பினார்.

இதுதொடர்பான வழக்கை விசாரித்த, திருப்பூர் நீதிமன்றம், கவுசல்யாவின் தந்தை சின்னசாமி, ஜெகதீஷ், மணிகண்டன், செல்வக்குமார், கலை தமிழ்வாணன், மைக்கேல் ஆகிய 6 பேருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஸ்டீபன் தன்ராஜ், என்பவருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், மணிகண்டன் என்பவருக்கு ஐந்து ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.

கவுசல்யாவின் தாய் அன்னலட்சுமி, தாய் மாமா பாண்டித்துரை மற்றும் பிரசன்னா ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர்

கடந்த 2017 2017 டிசம்பர் 13 ம் தேதி இந்த வழக்கில் தீர்ப்பளித்த திருப்பூர் நீதிமன்றம், குற்ற விசாரணை முறைச் சட்டப்படி, மரண தண்டனையை உறுதிப்படுத்துவதற்காக, வழக்கை சென்னை உயர் நீதிமன்றத்திற்கு அனுப்பி வைத்தது திருப்பூர் நீதிமன்றம். அதேபோல, தண்டனையை எதிர்த்து குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பிலும், மூன்று பேர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து காவல் துறை தரப்பிலும் மேல் முறையீடு செய்யப்பட்டது.

இந்த அனைத்து வழக்குகளையும் சேர்த்து, நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் நிர்மல் குமார் அடங்கிய அமர்வு விசாரித்தது. கடந்த பிப்ரவரி மாதம் 12 ஆம் தேதி அனைத்து தரப்பு வாதங்களும் கேட்ட நீதிபதிகள், இறுதி விசாரணை நடைபெற்று அன்று தீர்ப்பு தள்ளிவைக்கபட்டது.

இந்நிலையில் இந்த வழக்கில் இன்று நீதிபதிகள் சத்திய நாராயணன் மற்றும் நிர்மல்குமார் அமர்வு மொத்தம் 327 பக்கங்கள் கொண்ட தீர்ப்பளித்தனர் இந்த தீர்ப்பில், சங்கர் கொலை வழக்கில் முதல் எதிரியான கவுசல்யாவின் தந்தை சின்னசாமிக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்த நீதிபதிகள், அவரை அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுதலை செய்து தீர்ப்பளித்தார். அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் காவல்துறை தரப்பில் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க படவில்லை எனவே விடுதலை செய்வதாக தீர்ப்பளித்தனர்.

அதேசமயம், இந்த வழக்கில் ஜெகதீஷ், மணிகண்டன், செல்வக்குமார், கலை தமிழ்வாணன், மைக்கேல் ஆகியோருக்கு விசாரணை நீதிமன்றம் விதித்த மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து தீர்ப்பளித்த நீதிபதிகள், இவர்கள் அனைவரும் 25 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும், தண்டனைக் குறைப்பு ஏதும் வழங்கக் கூடாது எனவும் தெரிவித்துள்ளனர்.

இந்த வழக்கில் திருப்பூர் நீதிமன்றத்தால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட தன்ராஜ் மற்றும் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட மணிகண்டன் ஆகிய இருவரின் தண்டனையை ரத்து செய்த நீதிபதிகள், இருவரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தனர்.

சங்கர் கொலையில் நீதிக்கான போராட்டம் தொடரும்- கௌசல்யா

மேலும், திருப்பூர் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட கவுசல்யாவின் தாய் அன்னலட்சுமி, மாமா பாண்டிதுரை மற்றும் கூலிப்படையைச் சேர்ந்த பிரசன்னா ஆகியோரின் விடுதலையை உறுதி செய்த நீதிபதிகள், அவர்களின் விடுதலையை எதிர்த்து காவல் துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Udumalaipettai Shankar Shankar Gowsalya
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment