முதல்வர் எடப்பாடி க.பழனிசாமி இன்று அளித்த பேட்டியில் கூறியதாவது: ‘மத்திய அரசு மக்களுக்கு தேவையான திட்டங்களை அறிவித்துள்ளது. இடைக்கால பட்ஜெட்டில், சிறு, குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ6 ஆயிரம் வழங்குவதாக அறிவிக்கப்பட்டது வரவேற்கத்தக்கது. அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ரூ3000 ஓய்வூதியம் வழங்கும் திட்டம் வரவேற்கத்தக்கது
மக்களுக்கான திட்டங்களை அறிவித்தால் அதற்கு அரசியல் உள்நோக்கம் கற்பிக்கிறார்கள். பட்ஜெட்டில் புதிய திட்டங்களை அறிவிக்காவிடில் உப்பு, சப்பில்லை என விமர்சிப்பார்கள்
தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்பு தான் கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கும். அரசு ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகள் ஏற்கப்படும். அரசை தாக்கி பேச வேண்டும் என்பதற்காகவே கிராம சபை கூட்டத்தை திமுக நடத்துகிறது. மக்களுக்கு நன்மை செய்ய வேண்டுமென கூட்டத்தை நடத்தவில்லை.
தமிழகத்தில் டெல்டா பாசன விவசாயிகளுக்கு கூடுதல் வசதிகள் செய்து தரப்படுகின்றன. தேர்தல் கருத்துக்கணிப்புகள் மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கவில்லை. தோற்பேன் என கருத்துக்கணிப்பில் கூறினார்கள்; ஆனால் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றேன்.’ இவ்வாறு கூறினார்.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook
Web Title:Union budget 2019 tn cm edappadi palaniswami
காங்கிரசை முன்கூட்டியே ‘கவனிக்கும்’ திமுக: மற்ற கூட்டணிக் கட்சிகள்?
அர்ச்சனா வீட்டுல விசேஷம்… குவிந்த டிவி பிரபலங்கள்: என்னா ஆட்டம்?
தேன்மொழி நடிகையின் உலகமே இவரால் அழகாகி விட்டதாம்: யாரு அவரு?
சிவகாசி பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 6 பேர் உடல் கருகி பலி
ஃபார்முக்கு திரும்பிய பிரித்வி ஷா: 227 ரன்கள் குவித்து சாதனை