Advertisment

4 வார்டுகளில் வென்ற விஜய் மக்கள் இயக்கம்; ஆரவார ரசிகர்கள்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் வெற்றியை பதிக்கும் விஜய் மக்கள் இயக்கம்; இதுவரை 4 வார்டுகளில் வெற்றி

author-image
WebDesk
New Update
4 வார்டுகளில் வென்ற விஜய் மக்கள் இயக்கம்; ஆரவார ரசிகர்கள்

Urban local body elections Vijay Makkal Iyakkam victory details: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களில் இதுவரை 4 பேர் வெற்றி பெற்றுள்ள நிலையில், இதனை விஜய் ரசிகர்கள் ட்விட்டரில் கொண்டாடி வருகின்றனர்.

Advertisment

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் பெற்ற வெற்றியை அடுத்து விஜய் மக்கள் இயக்கம், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் தனித்து களம் இறங்கியது.

தேர்தல் வெளியாகி வரும் நிலையில், முதலாவதாக விஜய் மக்கள் இயக்கம் சார்பில், புதுக்கோட்டை நகராட்சி 4-வது வார்டில் போட்டியிட்ட பர்வேஷ் முகமது வெற்றி பெற்றுள்ளார்.

பர்வேஷின் வெற்றி அறிவிக்கப்பட்ட உடனே, விஜய் ரசிகர்கள் ட்விட்டரில் இதனை கொண்டாட ஆரம்பித்து விட்டனர்.

இதையும் படியுங்கள்: சென்னையில் சிவகாமி ஐஏஎஸ் தோல்வி: திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் மகன் வெற்றி

இந்தநிலையில், விஜய் மக்கள் இயக்கம் தற்போது வரை 4 வார்டுகளில் வென்றுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபாத் நகராட்சி 3வது வார்டில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் போட்டியிட்ட மோகன் ராஜ், குமாரபாளையம் நகராட்சியில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் போட்டியிட்ட வேல்முருகன், திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி நகராட்சி 16-வது வார்டில் போட்டியிட்ட மணிமாலா சிலம்பரசன் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். 

கடந்த ஆண்டு நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் 129 இடங்களைக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Local Body Election Actor Vijay Vijay Makkal Iyakkam
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment