Advertisment

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு வேகமாக தயாராகி வரும் அரசியல் கட்சிகள்!

தமிழகத்தில் இன்னும் ஓரிரு மாதங்களில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலை சந்திக்க வேகமாகத் தயாராகி வருகின்றன.

author-image
WebDesk
New Update
Urban Local Body Polls, Tamil nadu political parties getting ready for urban local body elections, DMK, AIADMK, Congress, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுகு வேகமாக தயாராகி வரும் அரசியல் கட்சிகள் , திமுக, அதிமுக, காங்கிரஸ், திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம், Tamilnadu politics, DMK district secretaries meeting

வருகிற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அனைத்து இடங்களிலும் வெற்றி பெற்று ஸ்வீப் செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் ஆளும் திமுக மாவட்டச் செயலாளர்கள், எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் கூட்டம் சென்னையில் டிசம்பர் 18ம் தேதி சனிக்கிழமை நடைபெறும் என்று அறிவித்துள்ளது.

Advertisment

இந்த கூட்டத்தில் அனைத்து நிர்வாகிகளும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். அடுத்த வாரம் நடைபெறும் அடுத்த வாரம் நடைபெறும் திமுகவின் உயர்மட்ட நிர்வாகிகள் கூட்டம் தொடர்பாக எந்த நிகழ்ச்சி நிரலையும் கட்சி குறிப்பிடவில்லை என்றாலும், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் கட்சியின் நிகழ்ச்சி நிரலில் முதன்மையானதாக இருக்கும் என்று திமுக மூத்த தலைவர் ஒருவர் கூறினார்.

திமுக முன்னதாக ஒரு கூட்டம் நடத்தியதாகவும் அந்த கூட்டத்தில் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், கட்சி நிர்வாகிகள் கடுமையாக உழைத்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஆளும் கட்சிக்கு 100 சதவீத வெற்றியை உறுதி செய்ய வேண்டும் என்று கூறியதாக திமுக மூத்த தலைவர் ஒருவர் கூறினார்.

இதனிடையே, எதிர்க்கட்சியான அதிமுக உட்கட்சித் தேர்தலில் மும்முரமாக உள்ளதால் அக்கட்சி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை இன்னும் தொடங்கவில்லை. “அடுத்த இரண்டு நாட்களில், திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் அதிமுக மாவட்ட செயலாளர்கள், ஊரட்சி ஒன்றியங்கள் மற்றும் நகராட்சிகள் அளவில் கட்சி தேர்தல்களை மேற்பார்வையிட தேர்தல் அதிகாரிகளை நியமிப்பதில் மும்முரமாக இருப்பார்கள்” என்று அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

திமுகவின் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட ஆர்வமுள்ளவர்களிடம் இருந்து வேட்புமனுக்களை ஏற்கெனவே பெற்றுள்ளது. நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியை ஒருங்கிணைத்து, அடுத்த தேர்தலுக்கு தயார்படுத்த மாநில அளவிலான குழுவையும், ஒவ்வொரு நாடாளுமன்ற தொகுதிக்கும் ஒரு பொறுப்பாளரை நியமித்துள்ளது. என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும், அடுத்த ஓரிரு மாதங்களில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் வேகமாக தயாராகி வருகின்றன.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Tamilnadu Dmk Local Body Election Aiadmk
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment