Advertisment

கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தெரிவித்த அமெரிக்கா

DMK Chief M Karunanidhi passed away : திமுக தலைவர் கருணநிதி காலமானார்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ken juster , Karunanidhi passed away

ken juster , Karunanidhi passed away

DMK Chief M Karunanidhi passed away : திமுக தலைவர் கருணநிதி உடல்நலக்குறைவால் இன்று மாலை 6.10 மணிக்கு காவேரி மருத்துவமனையில் காலமானார்.

Advertisment

DMK Chief M Karunanidhi passed away : திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு அமெரிக்கா இரங்கல்

சென்னை ஆழ்வார்பேட்டையில் கடந்த 11 நாட்களாக உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த திமுக தலைவர் கருணாநிதி இன்று காலமானார். இவரின் மறைவுக்கு இந்திய பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உட்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கருணாநிதி மறைவு : பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்... நாளை சென்னை வருகை எனத் தகவல்

தமிழக அரசியல் வரலாற்றில் நாயகனாக திகழ்ந்த கருணாநிதியின் மறைவுக்கு அமெரிக்கா இரங்கல் தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் இருக்கும் இந்திய அம்பாசிடர் கென் ஜஸ்டர் தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அந்த இரங்கல் செய்தியில், “அமெரிக்காவின் சார்பாக மறைந்த முன்னாள் முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி குடுப்பத்திற்கும், தமிழக மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். தனது மாநிலத்திற்காகவும், நாட்டிற்காகவும் அவர் செய்த சேவைகளை எத்தனை ஆண்டுகள் என்றும் நினைவிருக்கும்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

Dmk M Karunanidhi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment