நாம் உடல் ஆரோக்கியதிற்காக பல உணவுகளை தேடி வாங்கிச் சாப்பிடுவோம். ஆனால் நமக்கு எளிதாக கிடைக்கும் தண்ணீரை பருகாமல், அதை தவிர்ப்போம். நமது உடலில் 60 % தண்ணீரால் ஆனது.
தண்ணீரில் கலோரிகள் இல்லை. இந்நிலையில் நாம் அதிகம் தண்ணீர் குடித்தால் நமக்கு பசி எடுக்காது. குறிப்பாக நமது உடலில் உள்ள எலக்ட்ரோலைட் சத்துகள் இழக்கும்போது, வரட்சி ஏற்படும். இதனால் நமது சிறு நீரகம் செயல்பாடுகள் பாதிக்கப்படும். சிந்தனை திறன் குறையும், உடல் சார்ந்த உழைப்பை வெளிப்படுதுவதில் சிக்கல் ஏற்படும்.
தண்ணீர் குடிப்பதால் உடலில் உள்ள திரவங்களின் அளவை பார்த்துகொள்கிறது. இந்நிலையில் உடலுக்கு தேவையான தண்ணீர் கிடைக்கும்போதுதான், உணவில் உள்ள சத்துக்களை உடல் ஏற்றுக்கொள்ளவும், ரத்த ஓட்டம், சத்துக்களை ஓரிடத்திலிருந்து இனியொரு இடத்திற்கு கொண்டு செல்லும் வேலைகளை செய்கிறது.
நாம் குடிக்கும் தண்ணீர்தான் நாம் சாப்பிடும் உணவை உடைத்து, உடலில் ஏற்றுக்கொள்ளச் செய்கிறது. மலச்சிக்கலை தடுக்கிறது. மேலும் ஆரோக்கியமான ஜீரண மண்டலத்தை உருவாக்க உதவுகிறது.
நாம் சரியாக தண்ணீர் எடுத்துக்கொண்டால் மூளையின் செயல்பாடு, நினைவாற்றல் அல்லது சிந்தனை மண்டலம் பாதிக்கப்படாது.
உடலில் வியர்வை வருவாவதால் உடலில் உள்ள முக்கிய திரவங்கள் இழக்கப்படுகிறது. இவை உடலுக்கு மீட்டு கொடுக்குகிறது தண்ணீர். நமது சிறுநீரகம் உடலில் உள்ள தேவையில்லாத விஷயங்களை வெளியேற்றுகிறது.
நாம் தண்ணீர் எடுத்துகொள்ளவில்லை என்றால், சிறுநீரகக் கல் மற்றும் சிறுநீரக வழிப்பாதையில் தொற்றும் கூட ஏற்படலாம்.
இந்நிலையில் ஒரு மனிதன் ஒரு நாளைக்கு 2.5 முதல் 3.5 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“