Advertisment

ஜெனிவாவில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சிலம்பாட்டம்: வீடியோ இணைப்பு

கூடாரம் அமைக்கப் பயன்படுத்தப்படும் கம்பைக் கொண்டு ஜெனிவா நகரில் சிலம்பாட்டம் ஆடிய வைகோ அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்

author-image
manik prabhu
புதுப்பிக்கப்பட்டது
New Update
vaiko, mdmk, geneva

சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனிவா நகரில் நடைபெற்று வரும் ஐ.நா.,மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள வைகோ, அங்கு சிலம்பாட்டம் ஆடி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

Advertisment

சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனிவா நகரில் ஐ.நா.,மனித உரிமைக் கவுன்சிலின் 36-வது அமர்வு நடைபெற்று வருகிறது. உலக நாடுகள் அனைத்திலும் நடைபெறும் மனித உரிமைகள் மீறல்கள் குறித்தும் அதற்கான தீர்வுகள் குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும். இந்த கூட்டத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டுள்ளார்.

இந்த கூட்டத்தில் கடந்த 18-ம் தேதியன்று வைகோ பேசியபோது, சுதந்திரமான இறையாண்மையுள்ள தமிழ் ஈழ தேசத்திற்கு பொதுவாக்கெடுப்பு நடத்த முன்வாருங்கள். அதற்கு முன்னால் இலங்கையின் வடக்கிலும், கிழக்கிலும் இருந்து சிங்கள இராணுவம் முற்றாக வெளியேற்றப்பட வேண்டும். சிங்களக் குடியேற்றங்கள் அகற்றப்பட வேண்டும். தமிழ்க் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும். இந்தப் பொது வாக்கெடுப்பை ஐ.நா.மன்றமே நடத்த வேண்டும் என வலியுறுத்தினார்.

இதையடுத்து, செப்டெம்பர் 25-ம் தேதியன்று ஜெனிவா மனித உரிமைகள் கவுன்சிலின் பிரதான அரங்கத்தில் பொதுச்செயலாளர் வைகோ இரண்டு முறை பேசினார். அப்போது, தமிழர்களாகிய நாங்கள் மிகவும் வேதனைப்படுவது யாதெனில், ஆறு மாத காலத்தில் அதிலும் 2009 மே மாதம் வரையில் 1,46,000 தமிழர்கள் சிங்கள இராணுவத்தால் கொல்லப்பட்டனர். இனப் படுகொலையில் இருந்து தமிழர்களைப் பாதுகாக்க ஐ.நா.மன்றம் தவறி விட்டது. முள்ளிவாய்க்காலிலும் அதற்கு முன்னரும் தான் நடத்திய இனப்படுகொலைக்குற்றங்களில் இருந்தும், 2015 தீர்மானத்தில் இருந்தும் தப்பித்துக்கொள்ள இலங்கை அரசு தந்திரமான வழிகளைக் கையாள்கின்றது.

இலங்கையில் 90 ஆயிரம் விதவைகள், காணாமல் போன கணவன், தந்தையை தேடி கண்ணீர் விட்டு அழுதுகொண்டிருக்கிறார்கள். இலங்கை அதிபர் சிறிசேனாவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவும், ஊடக நேர்காணல்களில் 2015 தீர்மானத்தின் பரிந்துரைகளை ஏற்க வேண்டியது இல்லை என்றும், போர்க்குற்றங்கள் விசாரணை எதுவும் நடக்காது என்றும் கூறுகின்றனர். ஆனால், இன்றைக்கும் ஈழத் தமிழர்களுக்கு எதிரான சித்திரவதையும், படுகொலைகளும் சிங்கள இராணுவம், போலீசால் நடத்தப்படுகின்றது என்று வைகோ பேசினார்.

பின்னர், ஐநா., கூட்டத்தில் வெளியே வந்த வைகோவை சிங்களப் பெண் ஒருவர் வழிமறித்து அவரை திட்டியுள்ளார். பின்னர் அவருடன் சேர்ந்து வந்த சில சிங்களர்கள் அவரை சுற்றி வளைத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அவரை தாக்க முயன்றதாகவும் கூறப்பட்டது. ஆனால், தமிழர்களுக்கு ஆதரவாக பேசுவதற்கு தனக்கு உரிமை உள்ளது என்று வைகோ வாதாடினார். பிரச்சினை முற்றிய நிலையில், அங்கிருந்த பாதுகாவலர்கள் வைகோவை பாதுகாப்பாக வெளியே கொண்டு வந்து விட்டனர். ஜெனிவாவில் வைகோ மீதான தாக்குதல் முயற்சிக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட பலரும் தங்களது கடும் கண்டனங்களை பதிவு செய்தனர்.

கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள வைகோ, ஜெனிவா நகர வீதிகளில் கூடாரம் போட்டு, ஈழப் படுகொலை குறித்த புகைப்படக் கண்காட்சியை அமைத்துள்ளார். நாள்தோறும் காலையில் கூடாரம் போட்டு புகைப்பட கண்காட்சியை அமைக்கும் வைகோ, இரவில் அதனை அகற்றி விட்டு, மீண்டும் மறுநாள் காலையில் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். அப்படி, கூடாரத்தை அகற்றும் பணியில் வைகோ ஈடுபட்டிருந்த போது, கூடாரம் அமைக்கப் பயன்படுத்தப்படும் கம்பைக் கொண்டு சிலம்பாட்டம் ஆடினார். அந்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

Mk Stalin Dmk Vaiko Mdmk United Nations Tamil Eelam
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment