சென்னை மற்றும் கோயம்புத்தூர் இடையே இயங்கவிருக்கும் வந்தே பாரத் ரயிலுக்கான முன்பதிவு நேற்று தொடங்கப்பட்டது. அதற்கான போர்டல் திறக்கப்பட்ட 30 முதல் 40 நிமிடங்களில் முன்பதிவு நிறைவுபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
இணையதளம் மூலம் ரயில் சேவைக்கான முன்பதிவு நடைபெற்றதால், பெரும்பாலான மக்கள் தங்களது மொபைல் ஆப் மூலம் டிக்கெட்டுகளை பெற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது.
கோயம்பத்தூர் மற்றும் சென்னைக்கு இடையே இயங்கவிருக்கும் புதிய வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார். இந்த ரயில் சேவை ஏப்ரல் 9-ம் தேதி முதல் இயக்கப்படும்.
இந்த ரயில் சென்னையில் இருந்து 5 மணி 50 நிமிடங்களில் கோவையை சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வந்தே பாரத் ரயிலின் குளிரூட்டப்பட்ட முதல் வகுப்பு இருக்கைக்கான டிக்கெட் ரூ.2,310 ஆகவும், இரண்டாம் வகுப்பு இருக்கைக்கான டிக்கெட் கட்டணம் ரூ.1,215 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
உணவு இல்லாமல் முதல் வகுப்பு இருக்கைக்கு ரூ.2,116 மற்றும் இரண்டாம் வகுப்பு இருக்கைக்கு ரூ.1,057 ஆக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
இந்த ரயில் சென்னையில் இருந்து காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், திருப்பூர் வழியாக கோவைக்கு இரு திசைகளிலும் இயக்கப்படுகிறது.
இந்த ரயிலில் 450 இரண்டாம் வகுப்பு இருக்கைகளும், 56 முதல் வகுப்பு இருக்கைகளையும் கொண்டு, மொத்தம் 8 பேட்டிகள் இயக்கப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil