அம்மா போல் வளர்த்த அக்காவின் மரணம்… மீளா துயரத்தில் திருமாவின் உருக்கமான பதிவு!

அக்கா என்னும் அம்மாவுக்கு வீர வணக்கம் என தொடங்கும் அந்த பதிவு

By: Updated: August 6, 2020, 10:43:02 AM

vck leader thol.thirumavalavan facebook : விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் மூத்த சகோதரி கொரோனாவால் உயிரிழந்தார். அவரின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனின் அக்கா பானுமதிக்கு கொரோனா தொற்று இருப்பது சில நாட்களுக்கு முன்பு உறுதி செய்யபட்டது. இதனால் அவர், சென்னை நுங்கம் பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

பானுமதியின் இந்த இறப்பு திருமாவை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதுக் குறித்து திருமாவளவன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் உருக்கமாக பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அக்கா என்னும் அம்மாவுக்கு வீர வணக்கம் என தொடங்கும் அந்த பதிவு படிப்பவர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

” எல்லோரும் கவனமாயிருங்கள் ; கொரோனா கொடியது ” என்று ஒவ்வொரு நாளும் முகநூல் நேரலையில் கெஞ்சுவேன். ஆனால், அக்காவைப் பற்றி கவனமில்லாமல் இருந்துவிட்டேனே. என்னை என்னால் ஆற்றுப்படுத்த இயலவில்லை. மீண்டும் வேண்டுகிறேன், எச்சரிக்கையாய் இருங்கள் ‘கொரோனா கொடியது’ ! என்ற விழிப்புணர்வையும் பதிவு செய்துள்ளார்.

திருமா தன் சகோதரி மீது எல்லையற்ற அன்பும் பாசமும் வைத்திருந்தார்.திருமாவளவ சென்னையில் தங்கியிருக்கின்ற நாட்களில், அவருக்கு உணவு அனுப்புவதிலிருந்து அவரை தாயைப் போலவே பாசம் காட்டி ஊக்குவித்தவர் பானுமதி அம்மையார் என்று மதிமுக கட்சி தலைவர் வைகோ தெரிவித்துள்ளார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Vck leader thol thirumavalavan facebook thirumavalavan facebook post thol thirumavalavan sister death

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement