Advertisment

விசிக பொருளாளர் முகமது யூசுப் கொரோனாவால் மரணம்; திருமாவளவன் இரங்கல்!

விசிக மாநில பொருளாளராக பதவி வகித்து வந்தவர் முகமது யூசுப். கடந்த 8-ம் தேதி கொரோனா தொற்றுக்கு உள்ளாகி சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியானது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
விசிக பொருளாளர் முகமது யூசுப் கொரோனாவால் மரணம்; திருமாவளவன் இரங்கல்!

VCK Treasurer Mohammed Yusuf Dies of Corona Tamil News : விடுதலை சிறித்தைகள் கட்சியின் மாநில பொருளாளர் முகமது யூசுப், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். விசிக தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில பொருளாளராக பதவி வகித்து வந்தவர் முகமது யூசுப். கடந்த 8-ம் தேதி கொரோனா தொற்றுக்கு உள்ளாகி சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியானது.

முகமது யூசுப்பின் உடல்நிலை மோசமாக இருப்பதாக தகவல் வெளிவந்த நிலையில், ‘கொரோனா தொற்றுக்கு யூசுப் உள்ளாகி இருப்பது பெருங்கவலை அளிப்பதாகவும், அவர் கொரோனா எனும் கொடுங் கிருமியின் கோரப் பிடியில் இருந்து விரைவில் மீண்டு வர வேண்டும் எனவும், அவரது ஜெய் பீம் முழக்கம் மேடைகளில் வழக்கம் போல் ஓங்கி ஒலிக்க வேண்டும்’ எனவும் அவர் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில், நேற்று முகமது யூசுப் சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது மறைவை அடுத்து, விசிக தலைவர் திருமாவளவன், ‘விசிக மாநில பொருளாளர் முகமது யூசுப் காலமானார் என்பதை மனம் ஏற்க மறுக்கிறது. என்னைக் குடும்பத்தில் ஒருவராக ஏற்றுக் கொண்டவர். என்மீது மாசிலா அன்பை பொழிந்தவர். மீண்டு வருவார் என நம்பியிருந்தேன். மனம் பதைக்கிறது. ஈடு செய்ய இயலாத பேரிழப்பு’ என ட்விட்டரில் இரங்கலை தெரிவித்துள்ளார்.

முகமது யூசுப்பின் உடலுக்கு விடுதலை சிறுத்தைகளின் தலைமையகமான அம்பேத்கர் திடலில் மரியாதை செய்யப்பட்டது. அப்போது, விடுதலை சிறுத்தைகள் கட்சியில் தலைவர் திருமாவளவன் வீரவணக்க உரையாற்றினார். பின்னர் யூசுப்பின் உடல், சாலிகிராமத்தில் உள்ள இஸ்லாமிய இடுகாட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

மேலும், அவரது இரங்கல் செய்தியில், ‘கண்ணியம் மிகுந்த தோழமைக்கு அடையாளமாய் கடைசி மூச்சுவரையில் வாழந்துகாட்டிய அருமைச் சகோதரர் முகமது யூசுப்பின் மறைவு தனிப்பட்ட முறையில் எனக்குப் பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும் என் உயிரின் உயிரான விடுதலைச் சிறுத்தைகளுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். மனிதகுலத்தையே அழித்தொழிக்கும் கொரோனாவின் கொலைவெறித் தாகம் எப்போது தணியும்?’ எனவும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற ” (https://t.me/ietamil)

Thirumavalavan Vck
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment