நடிகை விஜயலட்சுமி ராமாபுரம் போலீஸ் நிலையத்தில் ஆஜரான நிலையில், சுமார் 6 மணி நேரம் அவரிடம் விசாரணை நடைபெற்றது.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாக நடிகை விஜயலட்சுமி சென்னை ஆணையரிடம் திங்கள்கிழமை புகார் அளித்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் நேற்று நடிகை விஜயலட்சுமி ரமாபுரம் போலீஸ் நிலையத்தில் ஆஜரானார். இந்நிலையில் அவரிடம் 6 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. விசாரணை தொடர்பாக பத்திரிக்கையாளர்களிடம் எந்த தகவலும் கசிந்துவிடாமல் இருக்க, விஜய லட்சுமியை போல உடை உடுத்தி, பெண் போலீஸ் ஒருவரை காருக்குள் அமர வைத்து கூட்டிச் சென்றனர். அப்படி செல்லும்போது, பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பினார், விஜய லட்சுமியை போல் நடித்த பெண் போலீஸ் பதில் எதுவும், சொல்லவில்லை. இந்நிலையில் கார் சென்ற பின்பு பத்திரிக்கையாளர்கள் செல்லவில்லை. இந்நிலையில் உண்மையான விஜயலட்சுமி, விசாரணை முடிந்து தனியார் காரில் அனுப்பிவைக்கப்பட்டார். இதை பத்திரிக்கையாளர் வீடியோ பதிவும் எடுத்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“