நடிகர் விஜய் சேதுபதியை விரட்டி வந்து தாக்கிய மர்ம நபர்: பெங்களூரு ஏர்போர்ட் வீடியோ

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் சேதுபதி பெங்களூரு விமான நிலையத்தில் தாக்கப்பட்ட சம்பவம் அவருடைய ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Vijay Sethupathi attacked at Bengaluru airport viral video, விஜய் சேதுபதி மீது தாக்குதல், பெங்களூரு விமான நிலையத்தில் நடிகர் விஜய் சேதுபதி மீது தாக்குதல், வைரல் வீடியோ, Vijay Sethupathi attacked, Vijay Sethupathi attacked video, Vijay Sethupathi attacked viral video, actor vijay sethupathi, Vijay Sethupathi video

பெங்களூரு விமான நிலையத்தில் நடிகர் விஜய் சேதுபதியை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தாக்க முயன்ற வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் விஜய் சேதுபதி தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். அவர் நடித்த 4 திரைப்படங்கள் ஒரே மாதத்தில் வெளியாகி தமிழ் சினிமாவை திரும்பிப் பார்க்க வைத்தார். ஹீரோவாக மட்டுமில்லாமல், எந்த தயக்கமும் வில்லனாகவும் உச்ச நட்சத்திரங்களுடன் இணைந்தும் நடிக்கிறார். தெலுங்கு சினிமாவில் உப்பேனா படத்தில் வில்லனாக நடித்து டோலிவுட்டையும் கலக்கி வருகிறார். தற்போது இந்தி வெப்சீரிஸில் கவனம் செலுத்தி வருகிறார். மேலும், உலக நாயகன் கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் 2 படத்தில் நடித்துள்ளார்.

இந்த சூழலில்தான், பெங்களூரு விமான நிலையத்தில் நடிகர் விஜய் சேதுபதி பாதுகாவலர்களுடனும் விமான நிலைய பாதுகாப்பு வீரர்களுடனும் சென்று கொண்டிருக்கும்போது மர்ம நபர் ஒருவர் பின்னால் விரட்டி ஓடி வந்து தாக்கிய வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் விஜய் சேதுபதி மீதான தாக்குதல் சம்பவம் நேற்று (நவம்பர் 2) தேதி பெங்களூரு விமான நிலையத்தில் நடைபெற்றதாக தெரிய வந்துள்ளது.

விஜய் சேதுபதியை அந்த நபர் ஏன் தாக்கினார் எதற்காக தாக்கினார் என்ற தகவல் வெளியாக வில்லை. இது குறித்து நடிகர் விஜய் சேதுபதி தரப்பிலும் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் சேதுபதி பெங்களூரு விமான நிலையத்தில் தாக்கப்பட்ட சம்பவம் அவருடைய ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Vijay sethupathi attacked at bengaluru airport viral video

Next Story
பிளவுபட்ட அதிமுக-வை இணைக்க முயற்சி… நாளை மறுநாள் இரு அணிகளும் பேச்சுவார்த்தை
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express