Advertisment

விஜய் சேதுபதி மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்த நபர் மீது வழக்குப்பதிவு

விஜய் சேதுபதி நடிப்பதாக இருந்த ‘800’ திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானதிலிருந்து, சமூக ஊடகங்களில் நிறைய பேரின் கோபத்துக்கு ஆளானார்.

author-image
WebDesk
New Update
Vijay Sethupathi Daughter rape threat

விஜய் சேதுபதி

கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று பட சர்ச்சையில், நடிகர் விஜய் சேதுபதியின் மகளுக்கு கற்பழிப்பு அச்சுறுத்தல் விடுத்ததாக மாநகர காவல்துறையின் சைபர் க்ரைம் பிரிவு, ட்விட்டர் பயனரை பதிவு செய்துள்ளது. தந்தை-மகள் இருவரின் படத்துடன் @itsrithikrajh என்ற ட்விட்டர் கைபிடியிலிருந்து, அச்சுறுத்தல் பதிவு வெளியிடப்பட்டது. இதனையடுத்து, பல சங்கங்கள் மற்றும் பயனர்கள் சைபர் கிரைம் பிரிவில் ஆன்லைன் புகார்களை பதிவு செய்தனர்.

Advertisment

15 நிமிடத்தில் டேஸ்டி சாம்பார்: சிம்பிளான செய்முறை

"நடிகருக்கு எதிராக வெளியிடப்பட்ட செய்திகள் குறித்து சமூக ஊடகங்களில் நிறைய கன்சர்ன் உள்ளது" என மாநகர போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் ட்வீட் செய்தார். விஜய் சேதுபதியின் உதவியாளரும் சென்னை போலீஸ் கமிஷனரேட்டில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, வழக்கு பதிவும் செய்யப்பட்டது.

சந்தேகப்படும் நபர், ரித்திக் ராஜ் மீது, 153 பிரிவு (கலவரம், பகைமை ஏற்படுத்தும் நோக்கத்துடன் ஆத்திரமூட்டுவது), இந்திய தண்டனைச் சட்டத்தின் 294 (பி) (ஆபாச மொழியைப் பயன்படுத்துதல்) மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 67 (பி), குழந்தைகளை பாலியல் ரீதியான செயலில், மின்னணு வடிவத்தில் சித்தரிப்பதற்கான தண்டனை) உள்ளிட்டவைகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, ட்விட்டர் பயனர் தனது கணக்கை நீக்கியதாக போலீசார் தெரிவித்தனர்.

விஜய் சேதுபதி நடிப்பதாக இருந்த ‘800’ திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானதிலிருந்து, சமூக ஊடகங்களில் நிறைய பேரின் கோபத்துக்கு ஆளானார். அந்தப் படத்தில் இலங்கை சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிக்க தயாராக இருந்தார் விஜய் சேதுபதி. இலங்கை அரசாங்கம் ஈழ தமிழர்கள் மீது கொண்டு வந்ததாகக் கூறப்படும் அட்டூழியங்களுக்கு எதிராக ஒருபோதும் பேசாத தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த கிரிக்கெட் வீரரின் பாத்திரத்தில் அவர் நடிப்பது, குறித்து நடிகரின் ரசிகர்கள் வருத்தப்பட்டனர். முரளிதரனின் வேண்டுகோளைத் தொடர்ந்து, விஜய்சேதுபதி திங்களன்று படத்திலிருந்து விலகினார்.

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றில் நடிப்பதற்காக விஜய் சேதுபதி, கையெழுத்திட்டதைத் தொடர்ந்து அவரது மகளை அச்சுறுத்தும் வகையில் செய்தியை வெளியிட்ட ட்விட்டர் பயனரை திமுக எம்.பி கனிமொழி உட்பட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கண்டித்துள்ளனர். “விஜய் சேதுபதியின் மகள் மீதான விபரீத மிரட்டல் காட்டுமிராண்டித்தனம் மட்டுமல்ல, நம் சமூகத்துக்கு மிகவும் ஆபத்தானதும் கூட” என ட்வீட் செய்திருந்தார் கனிமொழி.

சுவையான சப்பாத்தி… மாவு ஃப்ரெஷ்ஷாக வைப்பது எப்படி?

”பெண்கள் மற்றும் குழந்தைகளை மென்மையான இலக்குகளாக மாற்றுவது ஒரு கோழைத்தனமான செயல். குற்றவாளி மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தேமுதிக நிறுவனர் தலைவர் விஜயகாந்த் இந்த சம்பவத்தை கண்டித்திருந்தார். இதேபோல், வி.சி.க தலைவர் தொல் திருமாவளவனும் இந்த சம்பவத்தை கண்டித்தார்.

 

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Vijay Sethupathi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment