'வேண்டும் நீரப்பா... வேண்டாம் சூரப்பா'! ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம்: விஜயகாந்த் கைது!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக சூரப்பா நியமனம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

தேமுதிக சார்பில் கடந்த 16ம் தேதி வெளியிடப்பட்ட அறிக்கையில்,  தமிழக ஆளுநர் அவர்கள் திரு.சூரப்பா அவர்களின் துணை வேந்தர் நியமனத்தை திரும்பப் பெற வேண்டுமென வலியுறுத்தி 20.04.2018 ஆம் தேதி வெளிக்கிழமை காலை 10 மணியளவில் பனகல் மாளிகை அருகில் ஆளுநர் மாளிகையை நோக்கி கண்டன பேரணி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, இன்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில் அக்கட்சியினர் 100க்கும் மேற்பட்டோர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் தேமுதிக மகளிர் அணி தலைவர் பிரேமலதாவும் பங்கேற்றார். ‘எங்களது தேவை காவிரி நீரப்பா…. சூரப்பா இல்லை’ என்று தேமுதிகவினர் முழக்கமிட்டனர். இதைத் தொடர்ந்து ஆளுநர் மாளிகையை முற்றுகையிட சென்ற தேமுதிகவினரை தடுத்து நிறுத்திய போலீசார் விஜயகாந்தையும், பிரேமலதாவையும் கைது செய்தனர்.

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

×Close
×Close