அண்ணா,கருணாநிதி பாதையில் ஸ்டாலின்.. இப்படி ஒரு ட்வீட்டை யார் பதிவிட்டிருப்பார்?

சீரும், சிறப்புமாக அந்த தலைவர்கள் வழியில் வழிநடத்த வேண்டும்

திமுக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மு.க ஸ்டாலினுக்கு வாழ்த்து கூறி தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார்.

விஜயகாந்த் வாழ்த்து செய்தி :

திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு, கட்சியின் பொதுக்குழு கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. திமுக தலைவராக மு.க. ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. கட்சியின் பொதுச்செயலாளர் க. அன்பழகன் இதனை அறிவித்தார்.

தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்டாலினுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட தேசிய தலைவர்களும், தமிழக அரசியல் கட்சி தலைவர்களும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்த் ஃபோனில் தொடர்புக் கொண்டு ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

கேப்டன் உடன் ஸ்டாலின் நடித்த முதல் படம் உங்களுக்கு தெரியுமா

இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் ஸ்டாலினுக்கு வாழ்த்து கூறி பதிவிட்டுள்ள ட்வீட்டில் , “ அறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் அவர்கள் பாதையில் ஸ்டாலின் அவர்களும் பயணித்து திராவிட முன்னேற்ற கழகத்தை சீரும், சிறப்புமாக அந்த தலைவர்கள் வழியில் வழிநடத்த வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

கழக பொருளாளர அவர்களும் தேர்ந்தெடுத்தமைக்கு தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பாக மகிழ்ச்சியுடன் பாராட்டுகளை தெரிவித்துக்கொள்ளுகின்றேன். தாங்கள் இயக்கத்திற்கு பெருமையையும், புகழையும் சேர்த்திட எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்ளுகின்றேன்” என்று கூறியுள்ளார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close