Advertisment

விஜய்யின் அடுத்த பட இயக்குனர் இவர்தானாம்!!!

மாநகரம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், விஜயை சந்தித்து, ஒன்லைன் ஸ்டோரியை சொல்லியுள்ளார். அது பிடித்துப்போகவே, கதையை ரெடி பண்ணுமாறு கூறியுள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
vijay, theri, mersal, மாநகரம், லோகேஷ் கனகராஜ், atlee, karthi, a.r.rahman

vijay, theri, mersal, மாநகரம், லோகேஷ் கனகராஜ், atlee, karthi, a.r.rahman

மாநகரம் படத்தை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisment

தெறி, மெர்சல் படங்களை தொடர்ந்து விஜய் - அட்லீ கூட்டணி, விஜய் 63 படத்தின் மூலம் மூன்றாவது முறையாக இணைந்துள்ளது.நயன்தாரா, யோகி பாபு உள்ளிட்டோர் நடிக்கும் இப்படத்தின் சூட்டிங், தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

இதனிடையே, மாநகரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ், சமீபத்தில் விஜயை சந்தித்து, ஒன்லைன் ஸ்டோரியை சொல்லியுள்ளார். அது விஜய்க்கு மிகவும் பிடித்துப்போகவே, கதையை ரெடி பண்ணுமாறு கூறியுள்ளார்.

இந்த படத்தை தொடர்ந்து, விஜய், லோகேஷ் கனகராஜின் படத்தில் நடிக்க உள்ளதாக வெளியாகியுள்ள தகவல், விஜய் ரசிகர்களை உற்சாகமடைய வைத்துள்ளது.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ், தற்போது கார்த்தி நடிப்பில் கைதி படத்தை இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

Actor Vijay Atlee Theri
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment