Advertisment

இடைத்தேர்தலில் திமுக தீவிரம்.. விக்கிரவாண்டி திமுக வேட்பாளர் அறிவிப்பு! யார் இந்த நா. புகழேந்தி?

இதுவரை 3 முறை விக்கிரவாண்டி திமுக ஒன்றிய செயலாளராக இருந்துள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Nadu news today in tamil,

Tamil Nadu news today in tamil,

Vikravandi constituency dmk candidate : தமிழக சட்டசபை தொகுதிகளான விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி ஆகிய தொகுதிகளுக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பெயர் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

தமிழக சட்டசபை தொகுதியான நாங்குநேரியில் காங்கிரஸ் கட்சி வசந்தகுமார் எம்.எல்.ஏவாக இருந்து வந்தார். பின்பு அவர் கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் போட்டியிட்டு அவர் வெற்றிபெற்று விட்டதால் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார். அதனால் நாங்குநேரி தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. அதேபோல விக்கிரவாண்டி அதிமுக எம்.எல்.ஏ இறந்துவிட்டப்படியால் அந்த தொகுதியும் காலியானதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இரு தொகுதிகளுக்குமான இடைத்தேர்தல் அக்டோபர் 21ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்கான மனுதாக்கல் செப்டம்பர் 23 தொடங்கி 30ம் தேதி வரை நடைபெறும். மனு மீதான பரிசீலனைகள் அக்டோபர் 1ம் தேதியும், மனுவை திரும்ப பெறுவதற்கு அக்டோபர் 3ம் தேதியும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 21ல் நடக்கும் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை பணிகள் அக்டோபர் 24ல் நடைபெறும் என தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து, ஆளுங்கட்சி மற்றும் எதிர்கட்சிகள் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட தயாராக உள்ளனர். தேர்தல் ஆணையத்தின் அறிவுப்புக்கு பின்பு செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர் மு.க ஸ்டாலின் இடைத்தேர்தல் நடைபெறும் 2 தொகுதிகளான விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி- ல் விக்கிரவாண்டி தொகுதியில் திமுக வேட்பாளர் போட்டியிடுவதாகவும், நாங்குநேரி தொகுதி கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படுவதாக அறிவித்தார்.

அதனைத் தொடர்ந்து தற்போது விக்கிரவாண்டி தொகுதியில் திமுக சார்பில் நா. புகழேந்தி போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நேர்க்காணல் நடைப்பெற்றது. அதனை தொடர்ந்து திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளரை, அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.

யார் இந்த நா. புகழேந்தி?

66 வயதாகும் நா. புகழேந்தி திமுகவின் விழுப்புரம் மத்திய மாவட்ட பொருளாளராக இருந்து வருகிறார்.இவர் கடந்த 2016- ஆம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டதாக தகவலும் ஒருபக்கம் பரவி வருகிறது. புகழேந்தி இதுவரை 3 முறை விக்கிரவாண்டி திமுக ஒன்றிய செயலாளராக இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Mk Stalin Dmk
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment