Advertisment

பரந்தூர் விமான நிலைய திட்டம்; எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம்

சென்னையை அடுத்த பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க திட்டம்; சந்தை மதிப்பை விட அதிகமாக வழங்குவதாக தெரிவித்த நிலையிலும், பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

author-image
WebDesk
New Update
பரந்தூர் விமான நிலைய திட்டம்; எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம்

Villagers oppose proposal to set up new airport, hold protests: காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஏகனாபுரம் மற்றும் பிற சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த கிராம மக்கள் பரந்தூரில் புதிய பசுமை விமான நிலையம் அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisment

இந்தத் திட்டத்திற்காக கையகப்படுத்தப்படும் நிலத்தின் சந்தை மதிப்பை விட அதிகமாக அவர்களுக்கு வழங்குவதாக அரசாங்கம் தெளிவுபடுத்திய ஒரு நாளுக்குப் பிறகு மக்களின் எதிர்ப்பு வந்துள்ளது.

இதையும் படியுங்கள்: சென்னையில் இடி மின்னலுடன் கொட்டித் தீர்த்த கனமழை; வெள்ளத்தில் மிதந்த சாலைகள்

ஞாயிற்றுக்கிழமை காலை, அப்பகுதி மக்கள், கறுப்புக் கொடிகள் மற்றும் பதாகைகளை ஏந்தி, புதிய விமான நிலையத்தை அமைக்கும் அரசாங்கத்தின் முடிவைக் கண்டித்து, முழக்கங்களை எழுப்பினர். அதில் ஒரு அட்டையில் “வேண்டாம், வேண்டாம், விமான நிலையம் வேண்டாம்” என்று எழுதப்பட்டிருந்தது.

இதற்கிடையில், தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, பெரிய விமானங்கள் நிறுத்த, பல முனையங்கள் மற்றும் விமான போக்குவரத்துக்கு தேவையான உள்கட்டமைப்புகளை அமைக்க கிட்டத்தட்ட 4,700 சதுர அடி நிலம் தேவை என்று தெளிவுபடுத்தினார். இதுகுறித்து அவர் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், குடியிருப்பாளர்களின் பிரச்னைகளுக்குத் தீர்வு காண உயர்மட்ட தொழில்நுட்பக் குழு அமைக்கப்படும் என்றார்.

மாநிலத்தின் முன்னேற்றத்திற்கு விமான நிலையம் அவசியமானது என்றும், கையகப்படுத்தப்படும் நில உரிமையாளர்களுக்கு ‘சந்தை மதிப்பை விட அதிகமாக’ அரசு வழங்கும் என்றும் அவர் கூறினார். 2008 ஆம் ஆண்டில் பயணிகள் போக்குவரத்தில் மூன்றாவது இடத்தில் இருந்த சென்னை விமான நிலையம், பெங்களூரு மற்றும் ஹைதராபாத் முறையே 14 மற்றும் 12 சதவிகித வளர்ச்சியைப் பதிவு செய்ததை அடுத்து ஐந்தாவது இடத்திற்குச் சென்றதை அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

20,000 கோடி மதிப்பீட்டில் 10 கோடி பயணிகளைக் கையாளும் வகையில் சென்னைக்கு அடுத்துள்ள பரந்தூரில் இரண்டாவது விமான நிலையம் அமைக்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகஸ்ட் 2ஆம் தேதி தெரிவித்தார்.

விமான நிலையத்தில் இரண்டு ஓடுபாதைகள், முனைய கட்டிடங்கள், டாக்சிவேகள், ஏப்ரன், சரக்கு முனையம் மற்றும் பிற தேவையான உள்கட்டமைப்புகள் இருக்கும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Chennai Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment