பெட்ரோல் ஊற்றி எரித்து சிறுமி கொலை: மு.க.ஸ்டாலின் கண்டனம்

தன் வீட்டுக்குள் வந்து, தனது கை கால்களை கட்டிப்போட்டு, தன் மீது பெட்ரோல் ஊற்றி, தீவைத்து சென்றுவிட்டதாக வாக்குமூலம் அளித்திருக்கிறார் அந்த சிறுமி.

Villupuram minor girl dies after burning with petrol, aiadmk councillor arrested, admk functionaries, mk stalin, dmk president mk stalin, dmk, முக ஸ்டாலின், திமுக, முக ஸ்டாலின் மீது அவதூறு வழக்கு, எம்பி எம்எல்ஏ நீதிமன்றம், tamil nadu govt defamation case against stalin, திமுக, defamation case transferred to mp mla special court, court news, tamil news, chennai news, tamil news tamil latest news
mk stalin, dmk president mk stalin, dmk, முக ஸ்டாலின், திமுக, முக ஸ்டாலின் மீது அவதூறு வழக்கு, எம்பி எம்எல்ஏ நீதிமன்றம், tamil nadu govt defamation case against stalin, திமுக, defamation case transferred to mp mla special court, court news, tamil news, chennai news, tamil news tamil latest news

விழுப்புரம் அருகே பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரிக்கப்பட்ட பள்ளி மாணவி, சிகிச்சை பலனின்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார்.

வடகிழக்கு இந்தியர்களும் போற்றும் சென்னை மாநகராட்சி…

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர், அருகே உள்ள சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயபால். இவரது மகளுக்கு வயது 14. அங்குள்ள அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்திருக்கிறார். சிறுமியின் பெற்றோர் நேற்று வெளியில் சென்றுவிட்ட நிலையில், அவர் மட்டும் வீட்டில் தனியாக இருந்து இருக்கிறார். அந்த நேரத்தில் அவர்களது வீட்டிலிருந்து, அதிகளவு புகை, வெளியேறுவதை கண்ட அக்கம்பக்கத்தினர், பதறியடித்து அங்கு சென்று பார்த்து இருக்கிறார்கள். அப்போது உடல் முழுவதும் தீக்காயங்களுடன், அலறித் துடித்திருக்கிறார் சிறுமி.

உடனே அவரை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மருத்துவமனைக்கு, விழுப்புரம் மாவட்ட நீதிபதி வந்திருக்கிறார். அப்போது, ”அதே கிராமத்தைச் சேர்ந்த கணபதியின் மகன் முருகன் (51), கந்தசாமி மகன் யாசகம் என்கிற கலியபெருமாள் (60), ஆகியோர் தன் வீட்டுக்குள் வந்து, தனது கை கால்களை கட்டிப்போட்டு, தன் மீது பெட்ரோல் ஊற்றி, தீவைத்து சென்றுவிட்டதாக வாக்குமூலம் அளித்திருக்கிறார் அந்தச் சிறுமி.

இதனைத்தொடர்ந்து, மேல்சிகிச்சைக்காக அவர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதற்கிடையே குற்றவாளிகள் இருவரும் நேற்று இரவு கைது செய்யப்பட்டனர். இதில் முருகன் என்பவர் அதிமுகவின் முன்னாள் கவுன்சிலர். இதுகுறித்து கூறிய சிறுமியின் பெற்றோர், ”கைது செய்யப்பட்ட இருவருக்கும் எங்களுக்கும் ஏற்கனவே பகை இருந்தது. ஒரு முறை எங்கள் மகனை கூட அவர்கள் தாக்கி விட்டனர். அவனை மீட்டு இதேபோல சிகிச்சை அளித்து வருகிறோம். மகனை தாக்கியவர்கள் மீது, போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்க போயிருந்தோம். அந்த ஆத்திரத்தில் தான் மகளை எப்படி தீ வைத்து எரித்து விட்டனர்” என்று தெரிவித்தனர்.

’க்ளாம் டால்’ யாஷிகா, ’டிரடிஷனல்’ அம்ரிதா – புகைப்படத் தொகுப்பு

95 சதவீத தீக்காயங்களுடன் கீழ்ப்பாக்கம், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். லாக் டவுன் நேரத்தில் இப்படியானதொரு கொலை சம்பவம், ஆளும் கட்சியினரால் நடத்தப்பட்டது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்த சம்பவம் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள தமிழக எதிர்கட்சி தலைவர், மு.க.ஸ்டாலின்,சிறுமி ஜெயஸ்ரீ மீது பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற அதிமுகவினர் கலியபெருமாள்- முருகனுக்கு உச்சபட்ச தண்டனை பெற்றுத் தர காவல்துறையினர் நடுநிலையோடு செயல்பட வேண்டும்.

சிறுமியின் குடும்பத்தினருக்கு எனது ஆறுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்!

உரிய நீதி கிடைக்க தி.மு.க துணை நிற்கும், “சிறுமி ஜெயஸ்ரீ மீது பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற அதிமுகவினர் கலியபெருமாள்- முருகனுக்கு உச்சபட்ச தண்டனை பெற்றுத் தர காவல்துறையினர் நடுநிலையோடு செயல்பட வேண்டும். சிறுமியின் குடும்பத்தினருக்கு எனது ஆறுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்! உரிய நீதி கிடைக்க தி.மு.க துணை நிற்கும்” என தனது கண்டனத்தைத் தெரிவித்திருக்கிறார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Villupuram 14 years old girl dies after burning with petrol aiadmk councillor

Next Story
சென்னையில் கொரோனா பாதிப்பு – மீண்டும் ராயபுரம் முதலிடம்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express