Advertisment

விழுப்புரத்தில் திமுக பிரமுகர் ஓடஓட விரட்டிக் கொலை; பதற்றம், போலீஸ் குவிப்பு

திமுக பிரமுகரை கொலை செய்துவிட்டு தப்பித்துச் சென்ற நால்வர் கும்பலை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.

author-image
WebDesk
Aug 10, 2022 16:36 IST
Villupuram DMK party member murder

திமுக பிரமுகர் ஜெயக்குமார்

விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகேயுள்ள கோட்டக்கரை என்ற பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். இவர் திமுக பொதுக்குழு உறுப்பினராக இருந்தவர்.

இந்த நிலையில் இன்று (புதன்கிழமை) காலை ஜெயக்குமார் தனது இருசக்கர வாகனத்தில் தேநீர் அருந்த சென்றுகொண்டிருந்தார்.

அப்போது இரும்பை என்னும் இடத்தில் நான்கு பேர் கொண்ட கும்பல் இவரை வழிமறித்து, பயங்கர ஆயுதங்களால் தாக்கியுள்ளனர்.

Advertisment

இதில் படுகாயமுற்ற ஜெயக்குமார் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையிலும் அவர் உயிரிழந்தார்.

இந்தக் கொலை குறித்து ஆரோவில் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். திமுக பிரமுகர் வெட்டிக் கொல்லப்பட்டதால் அங்கு பதற்றம் நிலவுகிறது.

publive-image

இதனால் சம்பவ பகுதியில் போலீசார் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஜெயக்குமாரை கொன்றுவிட்டு தப்பியோடிய நால்வரையும் போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.

இருசக்கர வாகனத்தில் சென்ற ஜெயக்குமாரை நால்வர் கொண்ட கும்பல் மறைத்து சரமாரியாக தாக்கியுள்ளனர். அப்போது அவர் உயிருக்கு பயந்து சாலைகளில் ஓடியுள்ளார். எனினும் நால்வர் கும்பல் விடாமல் துரத்தி துரத்தி வெட்டிக் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Dmk #Villupuram #Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment