காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் மணல் அள்ளுவதில் விதிமீறல்கள் : உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆணையம் அறிக்கை

காவிரி, கொள்ளிடம் ஆற்றுப் படுகையில் மணல் அள்ளுவதில் விதிமுறைகள் மீறப்பட்டிருப்பது குறித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை அமைத்த ஆணையம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது..

காவிரி, கொள்ளிடம் காவிரி ஆற்றுப் படுகையில் மணல் அள்ளுவதில் விதிமுறைகள் மீறப்பட்டிருப்பது குறித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை அமைத்த ஆணையம் சமர்ப்பித்த அறிக்கையின் விவரங்கள் கிடைத்துள்ளன.

கரூர், திருச்சி, தஞ்சை மாவட்டங்களில் காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் மணல் கொள்ளை குறித்து சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை நியமித்த ஆணையர்கள் ஆய்வு செய்தனர். அவர்கள் சமர்ப்பித்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ள முறைகேடுகளில் சிலவற்றை பட்டியலிடுகிறார், காவிரி ஆறு பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன்.

மணல் அள்ளுவது தொடர்பாக விதிமுறைகள் சொல்வது என்ன? அந்த விதிகள் எப்படி மீறப்பட்டிருக்கின்றன? என மேற்படி ஆணையர்களின் அறிக்கையில் உள்ள அம்சங்கள் இவை..

விதி :ஆற்றுப் படுகையில் மூன்று அடி ஆழம்(ஒரு மீட்டர்) வரை மட்டுமே தோண்டி மணலை அள்ள வேண்டும்;
விதிமீறல் : ஆறு முழுக்கவே 10 அடி முதல் 20 அடி ஆழம் வரை(களிமண் மற்றும் பாறை தெரியும்வரை) மணல் சுரண்டி எடுக்கப்பட்டு உள்ளது.

விதி :மணலை எடுத்துச் செல்வதற்கு ஆற்றுக்குள் நிரந்தரமான சாலை போன்ற அமைப்புகளை ஏற்படுத்தக் கூடாது.
விதிமீறல் : ஆறு முழுக்க நிரந்தரமான சாலைகள், மணலை எடுத்துச் செல்வதற்காக குறுக்கு வெட்டாக அமைக்கப்பட்டு உள்ளது.

விதி :ஆற்றுக்குள் அமைக்கப்படும் சாலை, மக்கி போகும் பொருட்களைக் கொண்டு மட்டும் ஏற்படுத்த வேண்டும்..
விதிமீறல் : ஆற்றுக்குள் அமைக்கப்படும் சாலையில் பெரிய, பெரிய பாறை கற்களை போட்டு அமைக்கப்பட்டு உள்ளது.

விதி :மணலை அள்ளுவதற்கு மனித சக்தியைத் தவிர, வேறு இயந்திரங்களைப் பயன்படுத்தக் கூடாது. தமிழக அரசு சிறப்பு அனுமதி பெற்றுதான் பொக்கலைன்பயன்படுத்தவேண்டும். அதுவும் 2 பொக்லைன் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
விதிமீறல் : மணல்குவாரி பகுதியில் ஆற்றில் விதிக்கு மீறி ஜே.சி.பி & பொக்லைன் இயந்திரங்கள் கொண்டுதான் இந்த பகுதியில் மணல் அள்ளப்பட்டுக்கொண்டு உள்ளது. (கரியமாணிக்கம் குவாரி)

விதி :ஆற்றினுள் எந்தெந்தப் பகுதியில் மணலை அள்ளுவதற்கு அனுமதி தரப்பட்டுள்ளது என்பதைக் கான்கிரீட் தூண்களும், சிகப்பு கொடிக்கம்பங்களும் நட்டு, எல்லையை வரையறுத்து பிரித்துக் காட்ட வேண்டும். அள்ளபடும் இடம் தெளிவாக தெரியும் வகையில் எல்லைக் கற்கள் நடப்பட்டு, கம்பிவேலி அமைக்கப்பட்டு இருக்க வேண்டும்.
விதிமீறல் : ஆற்றினுள் எந்தெந்தப் பகுதியில் மணலை அள்ளுவதற்கு அனுமதி தரப்பட்டுள்ளது என்பதைக் கான்கிரீட் தூண்களும், சிகப்பு கொடிக்கம்பங்களும் நட்டுஎல்லையை வரையறுத்து எங்கும் பிரித்துக் காட்டவில்லை. மணல்குவாரி ஒரு ஊரில் அமைகிறது என்றாலே அதன் கிழக்கு மற்றும் மேற்கில் ஆறுமுழுக்கவே அடுத்தகுவாரி அமையும் ஊர் வரை மணல் அள்ளுவது என்பதுதான் நடைமுறையாக உள்ளது.

விதி :மணலை அள்ளும்பொழுது, ஆற்றின் இருபுறமும் உள்ள கரைகளுக்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்படக் கூடாது.
விதிமீறல் : மணலை அள்ளும்பொழுது கரையாவது, மேடாவது என மணல் இருக்கும் பகுதி எங்கும் நீக்கமற அள்ளி, கரைகளுக்கும் பாதிப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

விதி:ஆற்றின் குறுக்கே பைப்புகள் போட்டு பாலம் போல் எதுவும் அமைக்க கூடாது!
விதிமீறல் : ஆற்றில் குறுக்கே 12 பைப் வரை எல்லாம் போட்டு, நிரந்தர பாலம் அமைத்து மணல்குவாரி இயங்கி வருகிறது.

விதி :ஆற்றின் இருபுறமும், கரையிலிருந்து 50 மீட்டர் தூரம் வரையில் மணல் அள்ளக்கூடாது. ஆற்றின் கரைக்கு அருகில்தான் மணல் அள்ள வேண்டும்.
விதிமீறல் : கரையிலிருந்து 50 மீட்டர் தூரம் வரையில் மணல் அள்ளக்கூடாது. ஆற்றின் கரைக்கு அருகில்தான் மணல் அள்ள வேண்டும் என்பது எல்லாம் எழுத்தில்மட்டும்தான் . இக்கரை முதல் அக்கரை வரை ஆற்றில் 2 கிலோ மீட்டர் நீளம்- 2 கிலோ மீட்டர் அகலத்தில் ஆற்றில் மணல் முழுக்கவே அள்ளப்பட்டு உள்ளது. ஆற்றில் எங்குமே மணல் சிறிதளவு கூட இல்லை.

விதி :குடிநீர் வடிகால் வாரியத்தின் பொறுப்பில் கூட்டுக குடிநீர் திட்டத்திற்காக. ஆறுகளில் உள்ள நீர் உறிஞ்சும் கிணறுகளில் இருந்து 500 மீட்டர் தூரத்திற்குமணல் எடுக்க கூடாது.
விதிமீறல் : இது எல்லாம் காகிதத்திற்கு மட்டுமே. ஆறுகளில் உள்ள நீர் உறிஞ்சும் கிணறுகளில் அருகேயே மணல் அள்ளியதற்கு எண்ணற்ற ஆதாரங்கள் இங்குஉள்ளது.(மனத்தட்டை குவாரி, பனயன்குறிச்சி குவாரி)

விதி :ஆற்றின் இரு கரையோரம் தான் மணல் அள்ள வேண்டும்,. ஆற்றின் நடுவில் அள்ளக்கூடாது. ஆற்றின் நீரோட்டப் பகுதியில் மணல் அள்ளக்கூடாது.
விதிமீறல் : இதுவும் காகிதத்திற்கு மட்டுமே இருக்கும் விதி ஆகும் . நடைமுறையில் ஆற்றின் நடுவிலும் ஆறு முழுக்க அள்ளுவதும், ஆற்றின் நீரோட்டப்பகுதியில் அள்ளுவதும் என்பதே உண்மை.

விதி :மணல் அள்ளும் போக்கில், ஆற்றுக்குள் குளம் போன்ற பள்ளங்களை ஏற்படுத்தக் கூடாது
விதிமீறல் : மணல் அள்ளும் போக்கில், ஆறு முழுக்கவே குளம் போன்ற பல பள்ளங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

விதி :மணல் அள்ளுவதற்க்காகவே ஆற்றின் போக்கை திசை திருப்பி விடக் கூடாது
விதிமீறல் : சட்டப் புறம்பாக மணல்குவாரி இயங்க ஆற்றின் நீரோட்டப் பாதையில் ஆறு மறிக்கப்பட்டு, திசை திருப்பி விடப்பட்டு மணல் அள்ளப்பட்டு உள்ளது.

விதி :மேலும், மணல் அள்ளிய விபரங்கள் அடங்கிய பதிவேடு, புகார் பதிவேடு, தாசில்தார் அடங்கிய ஆய்வுக்குழு வாரம் ஒரு முறை ஆய்வு செய்த விபரப் பதிவேடு அனைத்தும் மணல் அள்ளும் ஆற்றின் கரையில் வைத்திருக்க வேண்டும்
விதிமீறல் : இது எங்கும் நடைமுறையில் இல்லை

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

×Close
×Close