பழங்குடி சிறுவனை செருப்பு கழற்ற வைத்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்: சர்ச்சை வீடியோ

Minister dindigul srinivasan scheduled tribe boy issue:டேய் வாடா.. வாடா.. செருப்பை கழற்றுடா’ என அமைச்சர் கூற, அந்த சிறுவனும் அமைச்சரின் காலணியை கழற்றி மாட்டிவிட்டார்.

By: Updated: February 6, 2020, 02:14:30 PM

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மீண்டும் சர்ச்சையில் சிக்கினார். பழங்குடியின சிறுவனை அழைத்து செருப்பு கழற்ற வைத்த நிகழ்வு வைரல் ஆகியிருக்கிறது. சமூக வலைதளங்களில் இது விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது.

தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன். அவ்வப்போது ஏதாவது பேசி சர்ச்சைகளில் சிக்குவது திண்டுக்கல் சீனிவாசனின் வழக்கம். லேட்டஸ்டாக பழங்குடியின சிறுவனை செருப்பு கழற்ற வைத்து விவகாரத்தில் இவர் பெயர் உருள்கிறது.


நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் வளர்ப்பு யானைகள் நலவாழ்வு முகாமை துவக்கி வைக்க அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சென்றார். அதற்கு முன்பாக அங்கு ஒரு கோயிலில் வழிபடச் சென்ற அமைச்சர், அங்கிருந்த பழங்குடியின சிறுவனை அழைத்தார். ‘டேய் வாடா.. வாடா.. செருப்பை கழற்றுடா’ என அமைச்சர் கூற, அந்த சிறுவனும் அமைச்சரின் காலணியை கழற்றி மாட்டிவிட்டார். இந்த சம்பவத்தின் போது அமைச்சருடன் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யாவும் உடன் இருந்தார்.

இது தொடர்பான வீடியோக் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவுகின்றன. இந்த விவகாரம் விவாதங்களை கிளப்பியிருக்கிறது. இது தொடர்பாக திண்டுக்கல் சீனிவாசன் இதுவரை கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Minister dindigul srinivasan scheduled tribe boy issue

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X