Advertisment

”மீண்டு வருவேன்” கொரோனாவால் உயிரிழந்த வட்டாட்சியரின் கடைசி ஃபேஸ்புக் பதிவு!

மீண்டும் மீண்டு வந்து அனைவருக்கும் நன்றி சொல்வேன் என்ற நம்பிக்கையுடன் !

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
”மீண்டு வருவேன்” கொரோனாவால் உயிரிழந்த வட்டாட்சியரின் கடைசி ஃபேஸ்புக் பதிவு!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்ட விருத்தாச்சலம் வட்டாட்சியர் கவியரசு இருசன், கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

Advertisment

விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த கவியரசு (46 வயது)  கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வருவாய் வட்டாட்சியராக இரண்டு வருடங்கள்  பணியாற்றி வந்தார். வரலாற்று சிற்பங்கள் குறித்த தேடல்கள் இவரிடம் அதிகமாக இருந்தது என்று அவரின் உதவியாளர்கள் தெரிவிக்கின்றனர் .

கடந்த ஜூலை 8ஆம் தேதி கவியரசுக்கு மேற்கொள்ளப்பட்ட  மருத்துவ பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது . இதனையடுத்து கடந்த 10ஆம் தேதி முதல் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையிலும் சிகிச்சை பலனின்றி வட்டாச்சியர் கவியரசன் ஜூலை 18ம் தேதி இறைவனடி சேர்ந்தார்.

இந்நிலையில், ஜூலை 10ம் தேதி ( மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்) கவியரசு தனது பேஸ்புக் பக்கத்தில்,

"அன்பிற்கும் பாசத்திற்கும் உரிய விருதை வட்ட வாழ் பெருங்குடி மக்களே!

என் மேல் எப்போதும் பாசமழை பொழியும் ஊடக நண்பர்களே!

எப்போதும் அன்பு பாராட்டும் காவல் அலுவலர்களே!

எனது இரண்டாண்டு வருவாய் வட்டாட்சியர் பணியில் உடன் பயணித்த எனது பாசமிக்க கிராம நிர்வாக அலுவர்களே! அலுவலகத்தில் பணிபுரியும் அனைத்து நிலை அலுவலர்களே! வருவாய ஆய்வாளர்களே !

கிராம உதவியாளர்களே !

உங்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியினை சிரம் தாழ்த்தி சமர்ப்பித்துக்கொள்கின்றேன்.

COVID-19 symptoms காரணமாக தற்போது சிதம்பரம் RMMCH மருத்துமனையில் சிகிச்சையில் உள்ளதால் வருவாய் வட்டாட்சியர் பணியில் இருந்து விலகி விடைபெருகின்றேன்!

சிறப்பு நன்றிகள் எனது ஈப்பு ஓட்டுனர் பாலு ஒரு சகோதரனைப்போல இதுகாறும் எனை பாதுகாத்தாய் ! மீண்டும் மீண்டு வந்து அனைவருக்கும் நன்றி சொல்வேன் என்ற நம்பிக்கையுடன் ! " என்ற உருக்கமான ஒரு பதிவை பதிவிட்டார் .

வட்டாட்சியர் பணியில் இருந்து விலகி விடைபெருகின்றேன் என்று கூறிய கவியரசு  வட்டாட்சியர், இந்த மண்ணுலகை விட்டு விடைபெற்றார் என்ற செய்தி தமிழக மக்களை வேதனையடைய வைத்தது.

மறைந்த கவியரசுக்கு, உமையாள் என்ற ,மனைவியும், ஆரத்தியா என்ற மகளும் உள்ளார். ஆரத்தியா இரண்டாம் வகுப்பு படிக்கிறார்.

 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Corona Virus Corona
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment