Advertisment

பார்வை குறைபாடு ஒரு பிரச்சனையே இல்லை... சிவில் சர்வீஸ் தேர்வில் சாதித்த பூரண சுந்தரி!

அவரின் நீண்ட நாள் கனவை நிறைவேற்ற அவருடைய பெற்றோர்கள் தொடர்ந்து ஊக்குவித்துள்ளனர்

author-image
WebDesk
New Update
Visually impaired Madurai UPSC aspirant Poorna Sundari cleared civil service exams

Visually impaired Madurai UPSC aspirant Poorana Sundari cleared civil service exams :  மதுரை சிம்மக்கல் பகுதியை ஒட்டி இருக்கும் மணிநகரம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன். அவருடைய மனைவி ஆவுடை தேவி. இவர்களுக்கு பூரண சுந்தரி என்ற மகள் இருக்கிறார். இவருக்கு 5 வயது இருக்கும் போது பார்வை நரம்புகள் சுருங்கியதால் தன்னுடைய பார்வை திறனை முற்றிலுமாக இழந்துள்ளார்.

Advertisment

மேலும் படிக்க : சிவில் சர்வீஸ் தேர்வு முடிவு; 7வது இடம்பிடித்த தமிழக மாணவர்

பார்வைக்கும் சாதனைக்கும் துளியும் சம்பந்தம் இல்லை என்பதை மெய்பிக்கும் வகையில் இவருடைய சாதனை மிகப்பெரியது. நேற்று சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. 2019ம் ஆண்டு நடைபெற்ற ஆட்சி பணித் தேர்வில் பங்கேற்ற அவர் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். பூரணாவின் நீண்ட நாள் கனவை நிறைவேற்ற அவருடைய பெற்றோர்கள் தொடர்ந்து ஊக்குவித்துள்ளனர் . இவருக்கு மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

தமிழகத்தை சேர்ந்த 60 நபர்கள் சிவில் சர்வீஸ் தேர்வுகளில் வெற்றி பெற்றுள்ளனர். பாலநாகேந்திரன் மற்றும் பூரண சுந்தரி ஆகியோர் இதில் பார்வை குறைபாடு உடையவர்கள். 25 வயதாகும் பூரண சுந்தரி 4வது முறையாக இந்த தேர்வு எழுதி அதில் வெற்றி பெற்றுள்ளார். பூரண சுந்தரி தேசிய அளவில் 286வது இடத்தை பிடித்துள்ளார்.

Madurai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment