வீடியோ: செய்தியாளர் ஷாலினி மரணத்திற்கு முன்பு நடந்த இறுதி கொண்டாட்டம்

திண்டுக்கல் மாவட்டம் அருகே பிறந்தநாளிலேயே செய்தியாளர் ஷாலினி விபத்தில் உயிரிழந்துள்ளார். அவரின் இறுதி பிறந்தநாள் கொண்டாட்டம் வீடியோ வெளியாகியுள்ளது.

reporter shalini last birthday celebration

செய்தியாளர் ஷாலினி இறுதி பிறந்தநாள் கொண்டாட்டம்

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே பள்ளபட்டியில் வசிக்கும் தோழி ஒருவரைச் சந்திந்துவிட்டு நேற்று காரில் சென்னை திரும்பிக்கொண்டிருந்தனர் செய்தியாளர் ஷாலினி மற்றும் அவரின் நண்பர்கள். அப்போது மதுரையில் இருந்து திண்டுக்கல் பொட்டிகுளம் அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் விழுந்தது. இந்த விபத்தில் காரில் இருந்து ஷாலினி வீசி எரியப்பட்டார். பறந்து விழுந்த ஷாலினிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இந்த விபத்தில் காரில் பயணித்த ஷாலினி மற்றும் 4 பேருக்கும் பலத்த காயங்கள் ஏற்பட்டது. அனைவரும் மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ஷாலினி பரிதாபமாக உயிரிழந்தார்.

shalini car accident

மறைந்த ஷாலினிக்கு அன்று பிறந்தநாளும் கூட. பிறந்தநாளன்றே அவருக்குக் காத்திருந்த மரணம் குறித்து அறியாமல், நண்பர்களுடன் இணைந்து மகிழ்ச்சியாகப் பிறந்தநாள் கொண்டாடுகிறார். ஷாலினியை சுற்றி நண்பர்கள் நின்று “ஹாப்பி பர்த் டே” என்று பாட, கேக் வெட்டுகிறார். இந்த வீடியோ காட்சி தற்போது வெளியாகியுள்ளது.

பிறந்தநாளிலேயே ஷாலினிக்கு ஏற்பட்ட மரணம் பலரையும் மீளா துயரத்தில் தள்ளியுள்ளது. மகிழ்ச்சியாகப் பார்க்க வேண்டிய பிறந்தநாள் கொண்டாட்ட வீடியோவை ஷாலினியின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என அனைவரும் கண்ணீருடன் பார்த்து குமுறுகின்றனர்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close