Advertisment

திருச்சி மாநகரின் சில பகுதிகளில் நாளை குடிநீர் கட்

கம்பரசம்பேட்டை துணை மின் நிலையத்தில் மின் வாரியத்தால் மாதாந்திர பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படவிருப்பதால் நாளை 14.06.2022 ஒருநாள் மாநகராட்சிக்குட்பட்ட கீழ்க்கண்ட பகுதிகளில் குடிநீர் விநியோகம் இருக்காது என மாநகராட்சி ஆணையர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
திருச்சி மாநகரின் சில பகுதிகளில் நாளை குடிநீர் கட்

 கம்பரசம்பேட்டை துணை மின் நிலையத்தில் மின் வாரியத்தால் மாதாந்திர பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படவிருப்பதால் நாளை 14.06.2022 ஒருநாள் மாநகராட்சிக்குட்பட்ட கீழ்க்கண்ட பகுதிகளில் குடிநீர் விநியோகம் இருக்காது என மாநகராட்சி ஆணையர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Advertisment



திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட கம்பரசம்பேட்டை தலைமை நீர்ப்பணி நிலையம், டர்பைன் நிலையம், பெரியார் நகர் கலெக்டர் வெல் நீரேற்று நிலையம் மற்றும் ஜீயபுரம், பிராட்டியூர் கூட்டுக் குடிநீர் நிலையம் ஆகிய பகுதிகளுக்கு மின் விநியோகம் செய்திடும் கம்பரசம்பேட்டை துணை மின் நிலையத்தில் மின் வாரியத்தால் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை 14.06.22 அன்று காலை 9.45 மணிமுதல் மாலை 2.00 மணிவரை மேற்கொள்ளப்படவிருக்கின்றன.

இதனால் கம்பரசம்பேட்டை தலைமை நீர்ப்பணி நிலையத்திற்குள் அடங்கும் மரக்கடை, விறகுபேட்டை, ஆகிய பகுதிகளிலும், டர்பைன் நிலையத்தில் அடங்கும் மலைக்கோட்டை மற்றும் சிந்தாமணி ஆகிய பகுதிகளிலும், பெரியார் நகர் கலெக்டர் வெல் நிலையத்தில் அடங்கும் தில்லைநகர், அண்ணாநகர், புத்தூர், காஜாப்பேட்டை கண்டோன்மெண்ட், ஜங்ஷன், உய்யக்கொண்டான் திருமலை, தெற்கு ராமலிங்க நகர், ஆல்ஃபா நகர், பாத்திமா நகர், கருமண்டபம் மற்றும் காஜாமலை காலனி ஆகிய பகுதிகளிலும், அய்யளம்மன் படித்துறை கலெக்டர் வெல் நீர்ப்பணி நிலையத்தில் அடங்கும் புகழ்நகர், பாரி நகர், பழைய எல்லைக்குடி, காவேரிநகர், கணேஷ் நகர், சந்தோஷ் நகர், ஆலத்தூர், கே.கே கோட்டை மற்றும் பிராட்டியூர் கூட்டுக் குடிநீர் திட்டத்தில் அடங்கும் ராம்ஜி நகர், பிராட்டியூர், எடமலைப்பட்டிபுதூர், விஸ்வாஸ் நகர், ஜெயா நகர் மற்றும் பிராட்டியூர் காவேரி நகர் ஆகிய பகுதிகளிலும் 14.06.22 ஒருநாள் குடிநீர் விநியோகம் இருக்காது.

   

நாளை மறுநாள் 15.06.22 முதல் வழக்கம் போல் குடிநீர் விநியோகம் செய்யப்படும். எனவே, பொதுமக்களுக்கு இதனால் ஏற்படும் சிரமத்தைப் பொறுத்து மாநகராட்சியுடன் ஒத்துழைக்குமாறும், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறும் மாநகராட்சி சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

 மேற்கண்டவாறு திருச்சி மாநகராட்சி ஆணையர் இரா.வைத்தியநாதன் விடுத்துள்ள அறிக்கையில் கேட்டுக் கொள்ளபட்டுள்ளது.



செய்தி: க.சண்முகவடிவேல்

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment