Advertisment

கோவை வந்த ஆஸ்திரேலியா சட்டமன்ற உறுப்பினர்கள்: செண்டா மேளம் இசைத்து உற்சாக வரவேற்பு

கோவைக்கு வந்த மேற்கு ஆஸ்திரேலியா சபாநாயகர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கேரளா பாரம்பரிய செண்டா மேளத்தை உற்சாகமாக வாசித்து மகிழ்ந்தனர்.

author-image
WebDesk
New Update
Coimbatore

West Australia MLA's team visits coimbatore

கோவைக்கு வந்த வெஸ்டன் ஆஸ்திரேலியா சபாநாயகர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களை கேரளா பாரம்பரிய செண்டா மேளத்துடன் வரவேற்றனர்.

Advertisment

மேற்கு ஆஸ்திரேலியா சட்டமன்றத்தின் சபாநாயகர் மைக்கில் ராபர்ட்ஸ், மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் டேவிட் ஹனி,டேவிட் மற்றும் இந்திய வம்சாவளி ஆஸ்திரேலியா சட்டமன்ற உறுப்பினர் ஜெகதீஷ் கிருஷ்ணன் ஆகியோர் சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தடைந்தனர்.

இவர்கள் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் மாணவர்களுடன் கலந்துரையாட உள்ளனர். இதைத்தொடர்ந்து கோத்தகிரியில் தேயிலை விவசாயம் சார்ந்த நிகழ்வு மற்றும் பழங்குடியின கலாச்சார நிகழ்வுகளில் கலந்து கொள்ள உள்ளனர்.

இந்த நிலையில் கோவை விமான நிலையத்தில் ஆஸ்திரேலியா சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கேரள மாநிலத்தின் பாரம்பரிய செண்டா மேளம் இசைத்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

publive-image

இதை கண்டு களித்த ஆஸ்திரேலியா சட்டமன்ற உறுப்பினர்கள் தாங்களும் கேரளா பாரம்பரிய இசைக் கருவிகளை இசைத்து மகிழ்ந்தனர்.

publive-image

முன்னர் செய்தியாளர்களை சந்தித்த சட்டமன்ற உறுப்பினர் ஜெகதீஷ் கூறியதாவது. கலாச்சாரத்தை பற்றி தெரிந்து கொள்ளவும், இங்குள்ள கல்வித்தரம் அறியவும் தமிழகம் வந்துள்ளோம். கோவை மற்றும் கோத்தகிரியில் தனியார் கல்லூரிகளில் கல்வி சார்ந்த நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

உலகம் முழுவதிலும்  உள்ள  இளைஞர்களுக்கு தேவையான அனைத்து விஷயங்களும் நம் நாட்டில் உள்ளன.  நம் நாட்டின் கல்வித்தரம் உயர வேண்டும் கல்வித்தரத்தில் வேறுபாடும் மாறுபாடும் இருக்க கூடாது.

தமிழகத்திற்கும் வெஸ்ட் ஆஸ்திரேலியாவிற்கும் இடையேயான உறவை‌ மேம்படுத்த வேண்டும். நல்ல வேலை செய்பவர்களுக்கு எப்போதும் எங்கேயும் வேலை உண்டு. கலாச்சாரம் சார்ந்த விஷயங்கள் தமிழகத்தில் மகிழ்வை அளிக்கிறது. கல்வி மற்றும்  வேலை வாய்ப்பு சார்ந்த நாங்கள் எடுக்கும் முயற்சிக்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பு வழங்குகிறது.

அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் பி.டி.ஆர் உள்ளிட்ட தமிழக அரசியல் தலைவர்களை சந்தித்திருக்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.

உடன் மேற்கு ஆஸ்திரேலியா சட்டமன்றத்தின் சபாநாயகர் மைக்கில் ராபர்ட்ஸ், மற்றும் சட்டமன்ற உறுப்பினர் டேவிட் ஹனி ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழகம் வந்த மேற்கு ஆஸ்திரேலியா சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தமிழக கலாச்சார வரவேற்பை அளிக்காமல் கேரள மாநிலத்தின் கலாச்சார வரவேற்பை அளித்தது பொதுமக்கள் மத்தியில் கேள்வியை எழுப்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.

செய்தி: பி.ரஹ்மான், கோவை மாவட்டம்

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment