Advertisment

எது முதன்மையானது - தேசம் அல்லது மதம்? சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

ஆடைக் கட்டுப்பாடு தொடர்பான சர்ச்சைகளை சில சக்திகள் எழுப்பி வருகின்றன, அது இந்தியா முழுவதும் பரவுகிறது – சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி

author-image
WebDesk
New Update
KN Nehru brother Ramajeyam murder case, Ramajeyam murder case returns to state police, government forms SIT for ramjeyam case, ராமஜெயம் கொலை வழக்கு, ராமஜெயம் கொலை வழக்கு மீண்டும் தமிழக காவல்துறைக்கு திரும்பியது, சிறப்பு விசாரணைக்குழு அமைப்பு, Ramajeyam, DMK, Minister KN Nehru

What is paramount – nation or religion, asks Madras High Court: நாட்டில் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் சில சக்திகளின் வளர்ந்து வரும் போக்கு குறித்து ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்திய சென்னை உயர்நீதிமன்றம், எது முதன்மையானது - தேசம் அல்லது மதம் என்று கேட்டு அதிருப்தி தெரிவித்தது.

Advertisment

கர்நாடகாவில் ஹிஜாப் தொடர்பான விவாதம் தீவிரமடைந்துள்ள சூழலில், பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி டி.பாரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய முதல் பெஞ்ச், ஆடைக் கட்டுப்பாடு தொடர்பான சர்ச்சைகளை சில சக்திகள் எழுப்பி வருகின்றன, அது இந்தியா முழுவதும் பரவுகிறது, என்று அதிருப்தி தெரிவித்தது.

மேலும், "இது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது, யாரோ ஒருவர் 'ஹிஜாப்' அணிந்து செல்கிறார்கள், சிலர் தொப்பி மற்றும் இன்னும் சிலர் மற்ற விஷயங்களை அணிந்து செல்கிறார்கள். இது ஒரே நாடா அல்லது அது மதத்தால் பிரிக்கப்பட்டதா அல்லது அது போன்ற ஏதாவதா. இது மிகவும் ஆச்சரியமாக உள்ளது,” என்று பெஞ்ச் கூறியது.

இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என்ற உண்மையைச் சுட்டிக்காட்டிய பொறுப்பு தலைமை நீதிபதி, "தற்போதைய விவகாரங்களில் இருந்து கண்டுபிடிக்கப்படுவது, மதத்தின் பெயரால் நாட்டைப் பிளவுபடுத்தும் முயற்சியைத் தவிர வேறில்லை." என்று கூறினார்.

திருச்சிராப்பள்ளி மாவட்டம் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுக்கள் மீதான விசாரணையின் போது பொறுப்பு தலைமை நீதிபதி மேற்கண்டவாறு கூறினார்.

வியாழக்கிழமை ரங்கராஜன் நரசிம்மன் தாக்கல் செய்த பொதுநல மனுவில், பக்தர்களுக்கான ஆடைக் கட்டுப்பாடுகளை கடுமையாக அமல்படுத்த உத்தரவிடுமாறும், இந்துக்கள் அல்லாதவர்கள் தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களுக்குள் நுழைவதைத் தடுக்கவும், கோயில் வளாகங்களில் வணிக நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கவும் நீதிமன்றத்தை வேண்டிக் கொண்டார்.

கோயில்களின் நுழைவாயிலில் இந்துக்கள் அல்லாதவர்கள் நுழைவதைத் தடைசெய்து, ஆடைக் கட்டுப்பாடுகளை நிர்ணயிக்கும் வகையில் காட்சிப் பலகைகள் வைக்கப்பட வேண்டும்,” என்றும் ரங்கராஜன் நரசிம்மன் தனது மனுவில் கோரியிருந்தார்.

பிரத்தியேகமான ஆடைக் கட்டுப்பாடுகள் இல்லாதபோது, ​​டிஸ்ப்ளே போர்டுகளை வைப்பது எப்படி என்ற கேள்வி எழும் என்று பெஞ்ச் வியந்தது.

மனுதாரர் உத்தரவிட வலியுறுத்தியபோது, ​​அவரது வேண்டுகோளுக்கான ஆதாரத்தை சமர்ப்பிக்குமாறு பெஞ்ச் அறிவுறுத்தியது. ஆகமங்களில் (சடங்குகள்) எந்தப் பகுதி பேன்ட், வேட்டி மற்றும் சட்டைகளைக் குறிக்கிறது என்று பெஞ்ச் கேட்டது.

மனுதாரரின் இடைவிடாத வலியுறுத்தலால் கோபமடைந்த பெஞ்ச், நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக தடைவிதிப்பதாக அவரை எச்சரித்ததுடன், பொருத்தமான வார்த்தைகளைப் பயன்படுத்தவும், சண்டையிடுவதைத் தவிர்க்கவும் அவருக்கு அறிவுறுத்தியது.

ஒவ்வொரு கோயிலும் அதன் சொந்த வழக்கத்தைப் பின்பற்றி வருவதாகவும், பிற மதத்தைச் சேர்ந்தவர்கள் கொடிமரம் வரை மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தமிழ்நாடு அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இந்த மனு ரிட் மனுவின் எல்லைக்கு அப்பாற்பட்டது என்பதால், சென்னை உயர் நீதிமன்றத்தின் டிவிஷன் பெஞ்ச் ஏற்கனவே ஆடைக் கட்டுப்பாடுகளை பரிந்துரைக்கும் ஒற்றை நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ததை அட்வகேட் ஜெனரல் நினைவு கூர்ந்தார்.

இது பரவலான சீற்றத்தையும் விவாதத்தையும் தூண்டியது என்று அவர் சுட்டிக்காட்டினார்.

இறுதியாக, ஆடைக் கட்டுப்பாடு தொடர்பான விளக்கங்களுடன் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய மனுதாரருக்கு பெஞ்ச் அனுமதி அளித்தது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Chennai High Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment