Advertisment

மதுரை கலைஞர் நூலகம்.. தள்ளிப் போன திறப்பு விழா.. இதுதான் காரணமா?

மதுரை கலைஞர் நூலக கட்டடத்திற்கு 99 கோடி ரூபாயும், புத்தகம் வாங்க 10 கோடி ரூபாயும், கணினி வாங்க 5 கோடி ரூபாயும் என மொத்தம் 114 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.

author-image
Jayakrishnan R
புதுப்பிக்கப்பட்டது
New Update
When Kalaignar memorial library in Madurai will available to the public

மதுரை கலைஞர் நூலக மாதிரி புகைப்படம்

மதுரையில் கட்டப்பட்டு வரும் கலைஞர் நினைவு நூலகம் முழுக்க முழுக்க ஆராய்ச்சி மாணவர்களுக்காக உருவாகி வருகிறது.

Advertisment

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 97ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, மதுரையில் கலைஞர் நினைவு நூலகம் அமைக்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

அதன்படி, மதுரை புதுநத்தம் சாலையில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 2.7 ஏக்கர் நிலத்தில் 2 லட்சத்து 179 சதுர அடி கட்டட பரப்பளவில் 8 தளங்களுடன் நவீன வசதிகளுடன் கலைஞர் நினைவு நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.

இதில், கட்டடத்திற்கு 99 கோடி ரூபாயும், புத்தகம் வாங்க 10 கோடி ரூபாயும், கணினி வாங்க 5 கோடி ரூபாயும் என மொத்தம் 114 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.

அடித்தளத்தில் வாகன நிறுத்தத்துமிடமும்; தரை தளத்தில் வரவேற்பு அரங்கம், தமிழர் பண்பாடு, அறிவியல் கண்டுபிடிப்புகள் அடங்கிய கலைக்கூடம், மாநாட்டு கூடம், மாற்றுத்திறனாளிகள் பிரிவு ஆகியவையும்; முதல் தளம் முதல் ஆறாம் தளம் வரை இரண்டு லட்சத்திற்கும் மேலான நூல்களுக்கான பிரிவுகளும் அமையவுள்ளன.

இந்த நூலகத்திற்காக தேர்வு செய்யப்பட்ட இடத்தினை முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த 2021 அக்டோபர் 29ம் தேதி நேரில் பார்வையிட்டார். கொரோனா பாதுகாப்பு நடைமுறைகள் காரணமாக தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக 2022 ஜனவரி 11ம் தேதி முதலமைச்சர் ஸ்படாலின் அடிக்கல் நாட்டினார்.

அதன்பின்னர் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அடுத்தடுத்து ஆய்வுகள் செய்து கட்டுமான பணிகளை முடுக்கி விட்டிருந்த நிலையில் தற்போது 80% பணிகள் நிறைவு பெற்றுள்ளன.

இந்த நிலையில்,

ஆகஸ்ட் 7ஆம் தேதி கருணாநிதியின் நினைவு நாளை முன்னிட்டு அன்றைய தினம் நூலகத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர அரசு திட்டமிட்டிருந்தது.

ஆனால் நிர்வாக கோளாறு நூலகபணிகள் நிறைவு பெறாமல் இருப்பதால் தற்போது திறப்பு விழா தள்ளிபோகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment