வெற்றிவேல், தங்க தமிழ்செல்வன் கைது எப்போது? தடைவிதிக்க ஐகோர்ட் மறுப்பு

மனுதரார் வழக்கறிஞர், குற்ற எண்ணை இணைத்து, மனு தாக்கல் செய்வதற்காக தெரிவித்தார். அதுவரை காவல்துறையினர் கைது செய்ய இடைக்கால தடை விதிக்க வேண்டும் என கேட்டார்.

அரசு அதிகாரிகளை பணி செய்யாவிடமால் தடுத்ததாக பதிவு செய்யப்பட்ட புகாரில் டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன் ஆகியோரை கைது செய்ய தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

டிடிவி தினகரன் ஆதரவாளர்களான வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன் இருவரும் கடந்த வாரம் தலைமைச் செயலகத்திற்கு சென்றனர். நெடுஞ்சாலைத் துறையின் டெண்டரில் முறைகேடு நடந்ததாக கூறி, அதிகாரிகளிடம் புகார் அளிக்கச் சென்றனர். ஆனால் அவர்களை உள்ளே செல்ல போலீசார் அனுமதிக்கவில்லை.

இதையடுத்து வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன் காவல்துறையினருடன் வாக்குவாதம் செய்தனர். தங்கள் கோரிக்கை குறித்து அதிகாரிகளிடம் பேச வேண்டும் என்று வலியுறுத்தினர். ஆனால் அவர்களை உள்ளே செல்ல விடாமல் போலீசார் தடுத்தனர். இதையடுத்து வெற்றிவேல் மற்றும் தங்க தமிழ்ச் செல்வன் மீது தலைமைச் செயலாகக் வளாகத்திற்குள் அனுமதியின்றி நுழைந்தது, அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தது, அதிகாரிகளை மீரட்டியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கோட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தாங்கள் கைது செய்யப்படாமல் இருக்க முன் ஜாமீன் வழங்க கோரி வெற்றிவேல், தங்கதமிழ் செல்வன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கு உயர்நீதி மன்ற நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி முன் ஜாமீன் கோரி இருவரும் தாக்கல் செய்த மனுவில் குற்ற எண்ணை குறிப்பிடவில்லை. எனவே அதனை குறிப்பிட்டு தாக்கல் செய்யுங்கள் என தெரிவித்தார்.

இதற்கு மனுதரார் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், குற்ற எண்ணை இணைத்து, புதிய மனு தாக்கல் செய்வதற்காக தெரிவித்தார். அதுவரை காவல்துறையினர் கைது செய்ய இடைக்கால தடை விதிக்க வேண்டும் என கேட்டார்..

அதற்கு நீதிபதி, மறுத்துவிட்டார், தற்போதைய நிலையில் எந்த இடைக்கால உத்தரவையும் பிறப்பிக்க முடியாது. என தெரிவித்து வழக்கு விசாரணை நாளைக்கு தள்ளிவைத்தர்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close