Advertisment

தமிழ்நாடு பாஜக புதிய தலைவர் சீனியரா? புதுமுகமா?

தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டதையடுத்து, காலியாக உள்ள தமிழக பாஜக தலைவர் பதவிக்கு அக்கட்சியில் உள்ள மூத்த தலைவர்கள் பலரின் பெயர்கள் போட்டியில் இருப்பதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
தமிழ்நாடு பாஜக புதிய தலைவர் சீனியரா? புதுமுகமா?

தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டதையடுத்து, காலியாக உள்ள தமிழக பாஜக தலைவர் பதவிக்கு அக்கட்சியில் உள்ள மூத்த தலைவர்கள் பலரின் பெயர்கள் போட்டியில் இருப்பதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisment

தமிழகத்தின் அடுத்த பாஜக தலைவர் பதவி யாருக்கு கிடைக்க வாய்ப்புள்ளது என்று பாஜக வட்டாரங்களிடம் விசாரிக்கையில், முன்னால் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, சி.பி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட மூத்த தலைவர்களும் வானதி சீனிவாசன், கே.டி.ராகவன், அதிமுகவில் இருந்து பாஜகவில் இணைந்த நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட அடுத்த கட்ட தலைவர்களும் போடியில் இருப்பதாக கூறுகின்றனர்.

தமிழிசை சௌந்தரராஜனின் தமிழக பாஜக தலைவர் பதவி வருகிற டிசம்பர் மாதத்துடன் முடிவடைய இருந்த நிலையில் மத்திய அரசு அவரை தெலங்கானா மாநில ஆளுநராக நியமித்தது. இதையடுத்து, தமிழிசை சௌந்தரராஜன் பாஜக தலைவர் பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டார். இதனால், தமிழக பாஜக தலைவர் பதவி காலியாக இருக்கிறது. தமிழிசை சௌந்தரராஜனுக்கு வாழ்த்து கூறிய முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தமிழக பாஜக தலைவர் வருகிற டிசம்பர் மாதத்துக்குள் அறிவிக்கப்படுவார் என்று கூறினார்.

தமிழகத்தின் அடுத்த பாஜக தலைவர் பதவிக்கு யாருக்கு வாய்ப்புள்ளது என்று தமிழக பாஜக வட்டாரங்களில் பேசியபோது, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை நியமிக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்தனர். அரசியலில் நிதானமான அனுகுமுறையைக் கொண்டவர். அனைவரையும் அரவனைத்து செல்பவர் என்பதால் அவருக்கே வாய்ப்புள்ளது என்று கூறுகின்றனர்.

பாஜகவின் மற்றொரு தரப்பினர், தமிழகத்தில் எதிர்க்கட்சிகளை எதிர்கொள்ள அதிரடியான ஒரு தலைவர் தேவை. அதனால், தற்போது பாஜக தேசிய செயலாளராக இருக்கும் எச்.ராஜா தமிழக பாஜக தலைவராக அறிவிக்க வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர். சிலர் அரசியலுக்கு அதிரடி மட்டும் போதாது நிதானமாக அனுகும் பக்குவமும் தேவை அதனால் ராஜா அறிவிக்கப்பட வாய்ப்பில்லை என்று கூறுகின்றனர்.

கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த பாஜக வட்டாரங்கள் கூறுகையில், பாஜகவுக்கு கொங்கு மண்டலத்தில் செல்வாக்கு உள்ளது. அதை தக்கவைத்துக்கொள்வதற்கும் வளர்ப்பதற்கும் கொங்கு பகுதியைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் தலைவராக அறிவிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறுகின்றனர். சிலர் பாஜக தமிழ் மாநில செயலாளராக உள்ள வானதி சீனிவாசன் தமிழக பாஜக தலைவராக வாய்ப்புள்ளது என்று கூறுகின்றனர்.

இது மட்டுமில்லாமல், பாஜகவில் சிலர் தற்போது பாஜக தமிழ் மாநில செயலாளராக உள்ள கே.டி.ராகவன் மற்றும் அதிமுகவில் இருந்து பாஜகவில் இணைந்த நயினார் நாகேந்திரன் தமிழக பாஜக தலைவராக அறிவிக்க வாய்ப்புள்ளது என்று கூறுகின்றனர். சிலர், தமிழகத்தில் பாஜக தலித்துகளுக்கு எதிரான கட்சி என்ற தோற்றம் உள்ளது அதை மாற்ற தலித் ஒருவர் பாஜக தலைவராக அறிவிக்க வாய்ப்பு உள்ளது என்றும் கூறுகின்றனர்.

இப்படி தமிழகத்தில் பாஜகவில் உள்ள மூத்த தலைவர்களும் அடுத்த கட்ட தலைவர்களும் தமிழக பாஜக தலைவர் பதவிக்கான பட்டியலில் இருக்கின்றனர்.

பாஜக வட்டாரங்கள் இப்படி பல்வேறு கருத்துகள் தெரிவித்தாலும் பாஜக தலைமைதான் இறுதி முடிவை அறிவிக்கும் என்பதால் தலைமையின் அறிவிப்புக்காக தமிழக பாஜக தலைவர்கள் காத்திருக்கின்றனர். தலைவர் பதவி யாருக்கு என்பது விரைவில் அறிவிக்கப்படும் நீங்களும் காத்திருங்கள் என்று கூறுகின்றனர் சில பாஜகவினர்.

Tamil Nadu Bjp H Raja Pon Radhakrishnan Dr Tamilisai Sounderrajan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment