Advertisment

தமிழக பொருளாதார மேம்பாடு ஆலோசனைக்கு குழு: இடம் பெற்ற நிபுணர்கள் யார், யார்?

பொருளாதாரத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தை மதிப்பிடுவதற்காக தமிழக அரசு முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் சி.ரங்கராஜன் தலைமையில் 24 பேர் கொண்ட உயர் மட்ட குழுவை அமைத்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil nadu government constituted 24-member high-level committee, who is who in state high-level committee members,பொருளாதாரத்தை மேம்படுத்த உயர் மட்டக் குழு அமைப்பு, உயர் மட்டக் குழுவில் யார் யார் உள்ளனர், சி ரங்கராஜன் முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர், 24 உறுப்பினர்கள் உயர் மட்டக் குழு, c rangarajan former rbi governor, tvs venu srinivasan, coronavirus, lock down, coronavirus impact on economy, the expert team to help reboot economy, சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் பி.துரைசாமி, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் என்.குமார்

கொரோனா வைரஸால் நாடு முழுவதும் மே 17-ம் தேதி வரை பொது முடக்கம் அமலில் உள்ளதால், அத்தியாவசியப் பணிகள் தவிர அனைத்து தொழில் துறைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், நாட்டின் பொருளாதாரம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கணிக்கின்றனர்.

இந்த நிலையில், பொருளாதாரத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தை மதிப்பிடுவதற்காக தமிழக அரசு முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் சி.ரங்கராஜன் தலைமையில் 24 பேர் கொண்ட உயர் மட்ட குழுவை அமைத்துள்ளது. இந்த குழு 3 மாதங்களுக்குள் தனது அறிக்கையை அரசிடம் சமர்ப்பிக்கும். இந்த குழுவின் ஒருங்கிணைப்பாளராக நிதிச் செயலாளர் எஸ்.கிருஷ்ணன் இருப்பார் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இந்த குழுவினர் பொது முடக்கத்தின் தாக்கம், சமூக விலகல் காரணமாக ஏற்பட்ட கூடுதல் செலவுகள் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஆகியவற்றை மதிப்பீடு செய்வார்கள்.

பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு அமைக்கப்பட்டுள்ள இந்த குழு பொருளாதாரத்தின் முக்கியமான துறைகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று நோயை சமாளிக்க உதவும் நடவடிக்கைகளையும் பரிந்துரைப்பார்கள். அதே நேரத்தில் இந்த குழு மாநில அரசின் நிதி நிலைமையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியின் தாக்கத்தை மதிப்பிடுகிறது.

இந்த குழு குழு நிதி பிரச்சினைகள் மற்றும் தேவையான நடவடிக்கைகளுக்கு மத்திய அரசுடன் சேர்ந்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் ஆகியவற்றை அடையாளம் கண்டு பரிந்துரை செய்யும். கடந்த பிப்ரவரி மாதம் துணை முதல்வர் ஓ.பனீர்செல்வம், மாநிலத்தின் ஜி.எஸ்.டி.பி விகிதத்திற்கு வரி மேம்படுத்த ஒரு நிபுணர் குழு அமைக்கப்படும் என்று அறிவித்தார். இப்போது, ​​தொற்றுநோயை கணக்கில் எடுத்துக்கொண்டு, அந்த குழுவின் பங்கு மறுவரையறை செய்யப்பட்டுள்ளது. பொது முடக்கத்தால் தமிழக அரசு 10,000 கோடி ரூபாய் பற்றாக்குறையை எதிர்கொள்கிறது.

பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை மேம்படுத்த ஆய்வு செய்ய தமிழக அரசு அமைத்துள்ள 24 உறுப்பினர்களைக் கொண்ட உயர் மட்டக் குழுவில் 10 பேர் அரசு அதிகாரிகளும் 14 பேர் கள வல்லுனர்களும் இடம்பெற்றுள்ளனர்.

இந்த உயர்மட்டக் குழுவில் இடம்பெற்றுள்ள வல்லுநர்கள்: முன்னாள் தலைமைச் செயலாளர் என்.நாராயணன், சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் பி.துரைசாமி, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் என்.குமார், மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் இயக்குனர் கே.ஆர்.சண்முகம், எம்.ஐ.டி.எஸ் இயக்குனர் பி.ஜி.பாபு, முருகப்பா குழுமத்தின் முன்னாள் தலைவர் ஏ.வெள்ளையன், மெட்ராஸ் சிமென்ட்ஸ் எம்.டி. என்.சீனிவாசன், டி.வி.எஸ் மோட்டார்ஸ் தலைவர் வேணு சீனிவாசன், இந்தியன் வங்கி எம்.டி பத்மஜா சந்துரு, ஈக்குவிடாஸ் வங்கி எம்.டி பி.என்.வாசுதேவன், 14வது நிதி ஆணைய உறுப்பினர் எம்.கோவிந்த ராவ், ஐ.ஐ.டி மெட்ராஸ் பேராசிரியர் எம்.சுரேஷ் பாபு, மற்றும் யுனிசெஃப் ஒருங்கிணைப்பாளர் பினகி சக்ரவர்த்தி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Economy Tamil Nadu Government Corona Coronavirus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment