Advertisment

பிடுங்கி நடும் தொழில்நுட்பம் இருக்கும் போது மரங்களை ஏன் வெட்டுகிறீர்கள்? திருச்சி ஆட்சியருக்கு ஐகோர்ட் நோட்டீஸ்

40 ஆண்டுகால மரங்களை வெட்டுவதால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Why are you cutting down trees when you have the technology of uprooting and planting? Court notice to Trichy Collector

சாலை விரிவாக்க பணிகளுக்காக மரங்கள் வெட்டி சாய்ப்பு

திருச்சியை சேர்ந்த கண்ணன் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொது நல மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார்.

அதில், "திருச்சி திருவனைக்கோயில் முதல் சுங்கச்சாவடி சாலை வரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சாலையின் இருபுறமும் சாலை விரிவாக்கம் மற்றும் வடிகால் நடைபாதை அமைப்பதற்காக மரங்கள் வெட்டப்பட்டு வருகின்றன.

Advertisment

திருவனைக்கோயில் முதல் சுங்கச்சாவடி சாலை வரை உள்ள பகுதி முக்கிய சாலை அல்ல,

இந்த சாலையில் அமைந்துள்ள மரங்கள் 40 ஆண்டுகள் பழமையானவை இதனை வெட்டுவதால் காற்று மாசுபாடு ஏற்பட வாய்ப்புள்ளது.

எனவே, திருவனைக்கோயில் முதல் சுங்கச்சாவடி சாலை வரை ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் சாலையின் இருபுறமும் சாலை விரிவாக்கம் மற்றும் வடிகால் நடைபாதை அமைப்பதற்காக மரங்கள் வெட்டப்பட்டுவதை தடுக்க உத்தரவிட வேண்டும்" எனக் கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் மகாதேவன் மற்றும் சத்திய நாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், மரங்களை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மாற்றி அமைப்பதற்கு தொழில்நுட்பம் இருக்கும் பொழுது மரத்தை ஏன் வெட்டுகிறீர்கள் என கேள்வி எழுப்பி வழக்கு குறித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒரு வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்.

க.சண்முகவடிவேல்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment