கள்ளக்குறிச்சி புதிய மாவட்டம் : அறிவிப்பின் பின் இருக்கும் காரணம் தெரிந்து கொள்ளுங்கள்

அருண் ஜனார்தன்

2019ம் ஆண்டி தொடக்கத்தில் ஜனவரி 8ம் தேதி சட்டசபையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கள்ளக்குறிச்சி பகுதியை தனி மாவட்டமாக அறிவித்தார். அந்த ஊர் மக்களின் பிரதான கோரிக்கையாக இருந்ததை ஏற்று, கள்ளக்குறிச்சியை தமிழகத்தின் 33வது மாவட்டமாக அறிவித்தார்.

கள்ளக்குறிச்சி புதிய மாவட்டம் அறிவிப்பின் காரணம்:

சட்ட அமைச்சரும் விழுப்புரம் தொகுதியின் எம்.எல்.ஏ-வுமான சி.வி. சண்முகம் மற்றும் உளுந்தூர்பேட்டையின் எம்.எல்.ஏ ஆர். குமரகுருவும்; கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்பது மக்களின் கோரிக்கை என்று முதல்வர் பழனிசாமியிடம் தெரிவித்தார்.

எதற்காக இந்த அறிவிப்பு : கள்ளக்குறுச்சி மாவட்டத்தில் இருக்கும் வளர்ச்சி மற்றும் வசதிகள் அனைத்தும் விழுப்புரத்தை காட்டிலும் குறைவு. இதனால் மக்கள் தங்களின் தேவைக்காக ஒவ்வொரு முறையும் விழுப்புரம் வந்து செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது. எனவே பல முக்கிய காரணங்களில் ஒன்றாக இதையும் சுட்டிக்காட்டி கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாக அறிவிக்குமாறு கோரிக்கை வைத்தனர் மக்கள்.

கள்ளக்குறிச்சியை கொண்டிருக்கும் விழுப்புரம் மாவட்டம் 1993ம் ஆண்டில் மறைந்த ஜெ. ஜெயலலிதா ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்டது. விழுப்புரத்தின் வளர்ச்சி மற்றும் ஆட்சியமைப்பை கருதி மேற்கு ஆர்காடு பகுதிகளான கடலூர் மற்றும் விழுப்புரத்தை இரண்டாக பிரித்தனர். அதன் பின்னர் விழுப்புரம் தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டது.

Kallakurichi: தமிழகத்தின் 33வது மாவட்டமாக உருவாகும் கள்ளகுறிச்சி! – முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

விழுப்புரத்தை சேர்ந்த முன்னாள் அதிகாரி ஒருவர் கூறுகையில், “விழுப்புரத்தின் தலைமையகம் கள்ளக்குரிச்சியில் இருந்து சுமார் 70 – 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. எனவே புதிய மாவட்டம் உருவாக்குவது, பழங்குடியினர் உட்பட மக்கள் பலரும் 2 அல்லது 3 மணி நேரம் பயணம் செய்வதை தவிர்க்க முடியும்.” என்றார்.

இப்போது என்ன ஆகும் : புதிய மாவட்டத்தின் அறிவிப்பை தொடர்ந்து, அங்கு ஒரு புதிய மாவட்ட ஆட்சியர் பணியமர்த்தப்படுவார் என முதல்வர் பழனிசாமி தெரிவித்திருந்தார். புதிய மாவட்டத்தின் அமைப்பிற்கான பணிகளை முதற்கட்ட பணிகளாக அவர் கவனிப்பார் என்றும் தெரிவித்திருந்தார். இந்த அறிவிப்பு வெளியான 15 நாட்களில் புதிய அதிகாரி நியமிக்கப்படுவார் என்றும், 3 மாதங்களுக்குள் வருவாய் துறையினருடன் இணைந்து புதிய மாவட்டத்திற்கான பணிகளை அவர் கவனிப்பார் என்றும் கூறப்பட்டுள்ளது.

முன்பு பிரிக்கப்பட்ட புதிய மாவட்டங்கள் : சுதந்திரம் பெற்ற பிறகு ராஜ் மாவட்டம் பின் வரும் நாட்களில் சின்னச் சின்ன ஊர்களாக பிரிக்கப்பட்டது. இந்த ஊர்களுக்கான தலைமையகம் சுமார் 100 கிலோ மீட்டர் தொகைவில் அமைக்கப்பட்டிருந்தது. பிறகு பெரிய மாவட்டங்களாக இருந்தவை அனைத்தும் மேலும் பிரிக்கப்பட்ட சிற்ய மாவட்டங்களாக உருவானது.

பழைய ராமநாதபுரம் மாவட்டம் பிரிக்கப்பட்டு ராமநாதபுரம், சிவகங்கை மற்றும் விருதுநகர் மாவட்டம் அறிவிக்கப்பட்டது. மதுரையில் இருந்து தேனி பிரித்து தனி மாவட்டமானது. மேலும், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தில் சில மாற்றங்கள் செய்து திருப்பூர் புதிய மாவட்டமாக உருவாக்கப்பட்டது. தர்மபுரியில் இருந்து கிருஷ்ணகிரி; பழைய தஞ்சாவூரில் இருந்து மாற்றங்கள் செய்யப்பட்டு நாகை மாவட்டமும், திருவாரூர் மாவட்டமும் உருவானது. இதே போல, திருச்சியில் இருந்து கரூர், பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்கள் பிறந்தன.

பிற கோரிக்கைகள் : கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாக அறிவித்ததை போலவே, கோவையில் இருந்து பொள்ளாச்சியையும், திருநெல்வேலியில் இருந்து சங்கரகோவிலையும் தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டுமென்று மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

×Close
×Close