கணவனின் கையில் வேறொரு பெண்ணின் பெயர்..அடி வெளுத்து கட்டிய காதல் மனைவி!

இருவரும் 2 ஆண்டுகளாக காதலித்து வந்ததும், 5 நாட்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டதும்

காதலர் கணவரின் கையில் வேறொரு பெண்ணின் பெயர் பச்சை குத்தப்பட்டிருப்பதை பார்த்த இளம்பெண் ஒருவர் கோபத்தில் காதல் கணவரை சரமாரியாக அடி வெளுத்து வாங்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

கோவையில் உள்ள சாய்பாபா கோவில் ஒன்றிற்கு கல்யாண புதுமண தம்பதிகள் இருவரும் ஜோடியாக வந்தனர். இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகி 5 நாட்கள் மட்டுமே ஆகியுள்ளது. இந்நிலையில் தனது காதல் கணவனின் கையில் வேறு ஒரு பெண்ணின் பெயர் பச்சை குத்தி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்,

இதுப்பற்றி தனது கணவனிடம் கேட்டுள்ளார். அப்போது தான் அந்த வாலிபர் தனக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டதாகவும் தனது முதல் மனைவியின் பெயரை தான் பச்சை குத்திருப்பதாக பேரதிர்ச்சியை தூக்கி போட்டுள்ளார்.இதனை சற்றும் எதிர்பாராத அந்த பெண் கோபத்தில் அந்த வாலிபரை தரதரவென இழுத்து வந்து சரமாரியாக அடித்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த கணவர், அவரிடம் இருந்து தப்பி ஓடினார்.இருந்தாலும் அந்த இளம்பெண் விரட்டிச்சென்று, சட்டையை பிடித்தும், முடியை பிடித்து இழுத்தும் விடாமல் தாக்கிக்கொண்டே இருந்தார். இப்படி எத்தனை பேரிடம் சொல்லி ஏமாற்றினாய்? என்று கூறி மீண்டும் தாக்கினார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் இருவரிடமும் விசாரணை நடத்தினர். அப்போது தான் இருவரும் 2 ஆண்டுகளாக காதலித்து வந்ததும், 5 நாட்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டதும் தெரியவந்தது.பின்னர் போலீசார் பொது இடத்தில் இதுபோன்று நடந்து கொள்ளக்கூடாது என்று இருவரையும் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவத்தை பார்த்து கோவிலுக்கு வந்தவர்கள் இந்த காட்சியை செல்போனில் பதிவு செய்தன. மேலும் சிலர் ஃபேஸ்புக்கில் லைவ்வாகவும் ஒளிப்பரப்பியுள்ளனர். இந்த வீடியோ அடுத்த 24 மணி நேரத்தில் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவியது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close