scorecardresearch

கோவை சின்னத்தடாகம் பகுதியில் சுற்றித் திரியும் யானை கூட்டம்.. வீடியோ வைரல்

நேற்றிரவு சின்னத்தடாகம் பகுதியில் இருந்து யானை கூட்டம் ஒன்று வெளியேறியுள்ளது.

Wild elephants roam around the Chinnathatagam area of Coimbatore
செல்போனில் படம் பிடித்தவரை துரத்திச் செல்லும் காட்டு யானை

கோவை மாவட்டம் தடாகம் வனப்பகுதியில் தற்போது 30க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டுள்ளன.

இந்த யானைகள் இரவு நேரத்தில் உணவிற்காக அருகில் உள்ள கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களில் புகுந்து வருகின்றன.

இந்நிலையில் நேற்றிரவு சின்னத்தடாகம் பகுதியில் இருந்து யானை கூட்டம் ஒன்று வெளியேறியுள்ளது.

இந்த யானைகள் ஆனைகட்டி சாலையை கடந்து மருதமலை வனப்பகுதியை வனப்பகுதியை நோக்கி சென்றன.

தொடர்ந்து அங்கிருந்து இளைஞர்கள் யானைகளை சத்தம் எழுப்பி விரட்டினர். அப்போது, தனியாக வந்த ஒற்றை ஆண் யானைக்கு அருகில் சென்று செல்போனில் படம் பிடிக்க முயன்ற நபரை திடீரென அந்த யானை துரத்தியது. இதனையடுத்து அந்த நபர் அங்கிருந்து ஓடிச் சென்று வாகனத்தில் ஏறி உயிர் தப்பினார்.

இதனை அங்கிருந்தவர்கள் செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளனர்.

இந்தக் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ள நிலையில் யானைகளுக்கு தொந்தரவு செய்யும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தியாளர் பி. ரஹ்மான்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Wild elephants roam around the chinnathatagam area of coimbatore