இயற்கையை ரசிக்க சென்றவர்கள் தீயிக்கு இரையான சோகம்: காட்டுத்தீயில் பலியானவர்கள் பற்றி உருக்கமான தகவல்கள்

தேனி மாவட்டம் குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்த 10 பேர் குறித்து உருக்கமான தகவல்கள் வெளியாகியுள்ளன்.  இயற்கையை ரசிக்க சென்றவர்களுக்கு  நேர்ந்த சோகம் பலரையும் கண்கலங்க வைத்துள்ளது.

தேனி மாவட்டம், போடி அருகே குரங்கணி மலைப் பகுதியில் மலையேற்றப் பயிற்சிக்கு சென்ற கல்லூரி மாணவிகள், சுற்றுலா பயணிகள் வனப்பகுதிக்குள் பரவிய பயங்கர காட்டுத் தீயில் சிக்கினர். இரு அணிகளாக சென்ற 39 நபா்களை மீட்கும் பணியில் உள்ளூா் பொதுமக்கள், வனத்துறையினா், தீயணைப்பு வீரா்கள், காவல் துறையினா் ஈடுபட்டனர்.

இதில், 10 பேர் உடல் கருகி இறந்ததாக, மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ்  அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.  இதில் சென்னையைச் சேர்ந்தவர்கள் 6 பேர் ஆவர்கள்.  பல்வேறு கனவுகளுடன் வாழ்க்கையை தொடங்கிய புதுமண தம்பதிகளும் இந்த கோர விபத்தில் உயிரிழந்துள்ளது  அவர்களின் குடும்பத்தாரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

சுபா:

27 வயதாகும் இவர், சென்னையில் உள்ள ஒரு தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார்.  தோழிகளுடன் ஹாலிடேஸை கழிக்க ட்ரெக்கிங் சென்ற சுபா, தீயில் கருகி உயிரிழந்தார். சமீபத்தில் தான் சுபாவிற்கு மாப்பிள்ளை பார்க்க அவரின் பெற்றோர்கள் முடிவு செய்துள்ளனர். ஆனால், அதற்குள் இந்த கோர சம்பவத்தில் சுபா பலியாகினார்.

நிஷா:

சென்னை வேளச்சேரியில் வசித்து வந்த இவர், தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைப் பார்த்து வந்துள்ளார்.  ஆன்லைன் மூலம் ட்ரெக்கிங் அனுபங்களை பார்த்து வியந்து,  சென்னை ட்ரெக்கிங் கிளப் குழுவுடன் சேர்ந்து மலையேற்றத்திற்கு சென்றுள்ளார். ஆனால்,  பரிதாபமாக தீயில் கருகி உயிரிழந்தார்.

அருண்பிரபாகர்:

27 வயதாகும் அருண், 2 வயது ஆண் குழந்தைக்கு தந்தை ஆவர், சில  மாதங்களாக மலையேற்றத்தில் அதிக ஈடுபாடு காட்டிய அருள் மலையேற்றத்தில்  லிம்கா சாதனை போன்ற பல சாதனைகளை செய்துள்ளார்.  சென்னை டிரெக்கிங் கிளப்பில் மேலாளராகவும் இருந்துள்ளார். ஆனால், மார்ச் 11 ஆம் தேதி தான் அவரின் சாதனைகளுக்கு இறுதி நாளாக அமைந்து விட்டது.

புனிதா:

திருமணமான 44 நாட்களில் புனிதா, காட்டுத்தீயில் சிக்கி பலியாகி இருப்பது அவர்களின் குடும்பத்தாரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இருவருக்கும் கடந்த ஜனவரி மாதம் 28-ந் தேதிதான் திருமணம் நடந்தது. இதற்காக அவரின் நண்பர்கள் புனிதாவின் ட்ரீட் கேட்டுள்ளனர். அதற்காக தான் புனிதா, இந்த மலையேற்ற ட்ரிப்பை ஏற்பாடு செய்துள்ளார்.

விவேக் :

புதுமாப்பிள்ளையான விவேக் தனது காதல் மனைவி திவ்யாவுடன் குரங்களிக்கு ஹானி மூன் சென்றுள்ளார். ஒரு முறையாவது ட்ரெக்கிங் சென்று வர வேண்டும் என்பது இந்த ஜோடியின் ஆசையாக இருந்துள்ளது. இவர்களிடன் தமிழ்ச்செல்வன் மற்றும் கண்ணன் என்ற நண்பர்களு சென்றுள்ளனர்.

ஆனால்,  திடீரென்று ஏற்பட்ட காட்டுத்தீயில்  சிக்கி விவேக், தமிழ்செல்வன் ஆகியோ பரிதாபமாக உயிரிழந்தனர்.  விவேக்கின் மனைவி திவ்யா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திவ்யா:

27 வயதாகும் இவர், எம்.ஏ. பட்டதாரி. சென்னை தி நகரில் உள்ள விளம்பர கம்பெனியில் வேலை செய்து வந்துள்ளார். சென்னையை சேர்ந்த மலையேற்ற பயிற்சி குழுவினருடன் திவ்யா குரங்கணிக்கு சுற்றுலா சென்றுள்ளார். ஆனால், தனியாக மலையேற்ற செல்வது தெரிந்தால் பெற்றோர்கள் பயப்படுவார்கள் என்று வீட்டிற்கு சொல்லாமல் திவ்யா சென்றுள்ளார். ஆனால், காட்டுதீயில் சிக்கி பரிதாபமாக அவர் உயிரிழந்தார்.

அகிலா:

10 மற்றும் 12-ம் வகுப்பு வகுப்பு பொதுதேர்வில்  மாவட்ட அளவில் முதல் மதிப்பெண் பெற்றவர் தான் அகிலா.  இயற்கை வளங்களை பாதுகாப்பதிலும் தீவிர ஆர்வம் கொண்டவராக இருந்துள்ளார்.  இயற்கையின் அழகை ரசிக்க வேண்டும் என்று மலையேற்றம் செல்ல அகிலா 1 மாத முன்பே திட்டமிட்டுள்ளார்.  ஆனால், மோசமான காட்டுதீயால் அகிலா பரிதாபமாக உயிரிழந்தார்.

விபின் :

சமீபத்தில் காதல் திருமணம் செய்துக் கொண்ட விபின் தனது மனைவி திவ்யாவுடன், குரங்கணி பகுதிக்கு மலையேற்றத்திற்கு சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக இவர்கள் இருவரும் காட்டுத்தீயில் சிக்கிக் கொண்டனர். இதில் விபின் தனது மனைவி திவ்யாவின் கண்முன்னே பரிதாபமாக உடல் கருகி பலியானர். திவ்யாவிற்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஹேமலதா:

30 வயதாகும் ஹேமாவுக்கு கூடிய விரைவில் திருமணம் நடக்கவிருந்தது. கல்யாணத்திற்கு தனது நண்பர்க்ளுடன் ட்ரெக்கிங் செல்ல விரும்பிய இவர், சென்னை ட்ரெக்கிங் குழுவுடன் இணைந்து கடந்த சனிக்கிழமை குரங்கணி பகுதிக்கு சென்றுள்ளார். ஆனால்,  காட்டுத் தீயில் மாட்டிக் கொண்டு பரிதாபமாக  உயிர் இழந்தார்.

 

 

 

×Close
×Close