Advertisment

ஸ்டாலின் கவனம் ஈர்க்க வெற்றிலை- பாக்கு வைத்து போராட்டம்: திருச்சியில் வினோதம்

தமிழக முதல்வர் வருகிற 8ம் தேதி திருச்சி வரவிருக்கும் நிலையில், திங்கள்கிழமை திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதல்வர் இன்றே எனக்காக வரவேண்டும், எனது வீடு கட்டுவதற்கு கட்டிட அனுமதி வழங்க வேண்டும், எனக்கோரி நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது.

author-image
WebDesk
New Update
ஸ்டாலின் கவனம் ஈர்க்க வெற்றிலை- பாக்கு வைத்து போராட்டம்: திருச்சியில் வினோதம்

க.சண்முகவடிவேல், திருச்சி

Advertisment

புதுக்கோட்டையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க நாளை மறுநாள் 8-ம் தேதி தமிழக முதல்வர் திருச்சி வரவிருக்கும் நிலையில், இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதல்வர் இன்றே எனக்காக வரவேண்டும், எனது வீடு கட்டுவதற்கு கட்டிட அனுமதி வழங்க வேண்டும், எனக்கோரி நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்த அளுந்தலைப்பூர் கிராமத்தின் வடக்கு தெருவை சேர்ந்தவர் அரவிந்த்ராஜ். இவருக்கு சொந்தமான இடத்தில் கட்டிடம் கட்டுவதற்கான அஸ்திவாரம் எழுப்பி உள்ளார்.

இந்நிலையில் கட்டிடம் கட்டுவதற்கு அனுமதி வேண்டி புள்ளம்பாடி கிராம நிர்வாகத்தை அணுகியுள்ளார். பலமுறை அலைந்தும் அனுமதி வழங்க முடியாது என்று ஊராட்சி நிர்வாகம் கூறியுள்ளது, இதனால் வீடு கட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தனது தாய் சரசுவதியுடன் வந்த அரவிந்த்ராஜ் கடுமையான வெயிலையும் பொருட்படுத்தாமல் தனது பிரச்சனையை தீர்க்க தமிழக முதல்வர் உடனடியாக நேரில் வரவேண்டும் என வலியுறுத்தி தர்னா போராட்டத்தில் ஈடுபட்டார்.

மேலும் ஆப்பிள், ஆரஞ்ச் வெற்றிலை பாக்கில் 51 ரூபாய் பணம் உள்ளிட்டவற்றை வைத்து தமிழக முதல்வருக்கு அழைப்பு விடுப்பதாக கூறி முதலமைச்சர் நேரில் வரவேண்டும் என்று தெரிவித்து ஏறத்தாழ இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதையடுத்து, காவல்துறையினர் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி உடன்பாடு எட்டப்படாத காரணத்தால் அவரை கைது செய்தனர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Tiruchirappalli Tiruchi District
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment