Advertisment

இந்த செயலிகள் உங்கள் ஃபோனில் உள்ளதா? உடனே டெலிட் செய்யுங்கள்.. எச்சரிக்கை!

இணைய பாதுகாப்பு தொழில்நுட்ப நிறுவனமான Bitdefender, ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயனர்கள் பயன்படுத்தும் 35 பிரபலமான செயலிகளில் ஆபத்தான மால்வேர் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், இந்த செயலிகள் வைத்திருந்தால் உடனே டெலிட் செய்ய வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
இந்த செயலிகள் உங்கள் ஃபோனில் உள்ளதா? உடனே டெலிட் செய்யுங்கள்.. எச்சரிக்கை!

அன்றாட வாழ்க்கையில் ஸ்மார்ட்போன் இன்றியமையாததாக மாறிவிட்டது. எல்லாவற்றிற்கும் ஸ்மார்ட்போன் பயன்படுத்த தொடங்கி விட்டோம். காய்கறி வாங்குவது, ஷாப்பிங் என எல்லாம் ஆன்லைன் மையமாகி விட்டது. பணமும் ஆன்லைனிலேயே செலுத்திவிடுகிறோம். இதனால் பாதுகாப்பும், அச்சமும் இரண்டும் இருக்கிறது.

Advertisment

பயனர்கள் தங்கள் வசதிக்கு ஏற்ப, தேவைக்கு ஏற்ப பல்வேறு செயலிகளை (ஆப்களை) டவுன்லோட் செய்து பயன்படுத்துகின்றனர். இதில் மூன்றாம் தரப்பு செயலிகள் ஆபத்தும் உள்ளது. எனவே, கவனமாக டவுன்லோட் செய்துவது அவசியம். கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து மட்டும் செயலிகளை டவுன்லோட் செய்ய வேண்டும் என்று எப்போதும் கூறப்படுகிறது. இருப்பினும் அதிலும் சில ஆபத்தான செயலிகள் கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Cybersecurity technology company Bitdefender இணைய பாதுகாப்பு தொழில்நுட்ப நிறுவனமான Bitdefender,ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயனர்கள் பயன்படுத்தும் 35 பிரபலமான செயலிகளில் ஆபத்தான மால்வேர் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், இந்த செயலிகள் வைத்திருந்தால் உடனே டெலிட் செய்ய வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

சைபர் செக்யூரிட்டி நிறுவனம் கூறுகையில், ப்ளே ஸ்டோரில் 35 மால்வேர் செயலிகள் பயனர்களை ஏமாற்றி அவற்றை பதிவிறக்கம் செய்ய வைப்பதாக கண்டறிப்பட்டுள்ளது. பயனர்கள் அவற்றை டவுன்லோட் செய்ததும், அந்த செயலியின் பெயர் மாற்றப்பட்டு, ஐகான் மறைந்துவிடுகிறது. இதன் பின்னணியில் விளம்பரங்களை வழங்குவதும் அதன் மூலம் வருவாய் ஈட்டுவதும் ஆகும். மோசமான விஷயம் என்னவென்றால், டெவலப்பர்கள் தங்கள் சொந்த கட்டமைப்பின் மூலம் இந்த விளம்பரங்களை இயக்குகிறார்கள், இது Android ஆல் செயல்படுத்தப்படும் பாதுகாப்புகளைத் தவிர்க்கிறது.

ஆபத்தான 35 மால்வேர் செயலிகளின் பட்டியல்

Walls light - Wallpapers Pack

Big Emoji - Keyboard

Grad

Wallpapers - 3D Backdrops

Engine Wallpapers - Live & 3D

Walls light - Wallpapers Pack

Big Emoji - Keyboard

Grad

Wallpapers - 3D Backdrops

Engine Wallpapers - Live & 3D

Stock Wallpapers - 4K & HD

EffectMania - Photo Editor

Art Filter - Deep Photoeffect

Fast Emoji Keyboard

Create Sticker for Whatsapp

Math Solver - Camera Helper

Photopix Effects - Art Filter

Led Theme - Colorful Keyboard

Keyboard - Fun Emoji

Sticker

Smart Wifi

My GPS Location

Image Warp Camera

Art Girls

Wallpaper HD

Cat Simulator

Smart QR Creator

Colorize Old Photo

GPS Location Finder

Girls Art Wallpaper

Smart QR Scanner

GPS Location Maps

Volume Control

Secret Horoscope

Smart GPS Location

Animated Sticker Master

Personality Charging Show

Sleep Sounds

QR Creator

Media Volume Slider

Secret Astrology

Colorize Photos

Phi 4K Wallpaper - Anime HD

இந்த செயலிகள் உங்கள் போனில் இருந்தால் உடனே டெலிட் செய்து விடுங்கள் என சைபர் செக்யூரிட்டி நிறுவனம் தெரிவித்துள்ளது. இப்போது உங்களுக்கு ஒரு கவலை வரலாம். பின், எப்படி பாதுகாப்பான செயலியை கண்டறிந்து டவுன்லோட் செய்வது என்று? இதோ சில வழிகாட்டுதல்கள் கொடுக்கப்பட்டுள்ளது, அதைப் பின்பற்றி டவுன்லோட் செய்யுங்கள்.

பாதுகாப்பான செயலி கண்டறிந்து டவுன்லோட் செய்வது எப்படி?

  1. முதலில் அந்த செயலியின் டெவலப்பர் யார் என்று தெரிந்து கொள்ளுங்கள். ஒரிஜனல் டெவலப்பர் ஆப் மட்டும் டவுன்லோட் செய்யவும்.
  2. எந்தவொரு ஆப் டவுன்லோட் செய்யும் முன், reviews (ரிவீயூஸ்) படிக்க வேண்டும். அதன் rating (ரேட்டிங்) தெரிந்து கொள்ள வேண்டும்.
  3. அதிகாரப்பூர்வ பக்கங்களிலிருந்து மட்டும் ஆப்களை டவுன்லோட் செய்ய வேண்டும். ஆண்ட்ராய்டு பயனர்கள் கூகுள் பிளே ஸ்டோர் (Google Play store), ஐபோன் பயனர்கள் ஆப்பிள் ஆப் ஸ்டோரிலிருந்து (Apple App store) டவுன்லோட் செய்ய வேண்டும்.
Technology Android
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment