Advertisment

எந்த ஆவணமும் வேண்டாம்... வீட்டில் இருந்தபடி ஆதாரில் முகவரியை மாற்றும் எளிய வழி!

How to update Aadhaar card address without proof via online Tamil News: ஆதாரில் உள்ள முகவரியை ஆன்லைன் மூலமாக மாற்றுவதற்கான எளிய வழிமுறைகளை இங்கு வழங்கியுள்ளோம்.

author-image
WebDesk
New Update
Aadhaar card update Tamil News How to update Aadhaar card address without documents via online

Aadhaar card update Tamil News: தற்போதைய சூழலில் ஆதார் அட்டை என்பது அவசியமான ஆவணங்களில் ஒன்றாக உள்ளது. எனவே அனைவரும் ஆதார் அட்டை எடுக்க வேண்டும் என ஆதார் வழங்கும் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் ஆதார் அட்டையில் உள்ள பிழைகளை ஆன்லைன் மூலம் திருத்திக் கொள்ள அவ்வப்போது அப்டேட்டுகளையும் வழங்கி வருகிறது. 

Advertisment

தற்போது உங்கள் ஆதார் அட்டையில் உள்ள முகவரியில் இருந்து வேறு முகவரிக்கு மாறி இருந்தால், அந்த முகவரியை வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலமாக மாற்றும் செய்யும் அப்டேட்யை ஆதார் வழங்கும் ஆணையம் வழங்கியுள்ளது. 

உங்கள் ஆதார் அட்டையில் உள்ள முகவரியை மாற்ற, ஆதார் வழங்கும் ஆணையத்தின் வலைதள பக்கமான (uidai.gov.in) என்பதற்கு சென்று 'மை ஆதார்' ‘My Aadhar’ என்ற மெனுவில் 'அப்டேட் மை ஆதார்' ‘Update your Aadhar’ என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். 

 இப்போது ‘டெமோகிராஃபிக்ஸ் டேட்டா ஆன்லைனில் புதுப்பிக்கவும்’ ‘Update Demographics Data Online’ என்பதைக் கிளிக் செய்யும் போது, நீங்கள் வேறு ​​ஒரு பக்கத்திற்கு அனுப்பப்படுவீர்கள். அதில் ‘முகவரி சான்று வழியாக முகவரியைப் புதுப்பிக்கவும்’ மற்றும் ‘ரகசிய குறியீடு வழியாக முகவரியைப் புதுப்பிக்கவும்’ ‘Update Address via Address Proof’ and ‘Update Address via Secret Code’ என்ற இரண்டு தேர்வுகள் இருக்கும். உங்களிடம் சரியான ஆவணங்கள் இருந்தால் முதல் விருப்பத்தையும், சரியான ஆவணங்கள் இல்லையென்றால் இரண்டாவது விருப்பத்தையும் தேர்வு செய்ய வேண்டும். 

ஆதார் வழங்கும் ஆணையத்தின் கூற்றுப்படி, முகவரி சரிபார்ப்பவருக்கு ஆன்லைனில் ஒரு கடிதத்தை அனுப்புவதன் மூலம் உங்கள்  முகவரி சரிபார்ப்பு நடைபெறும் என்று தெரிவித்துள்ளது. ஆனால் அவற்றுக்கு சில நிபந்தனைகளை  நீங்கள் பூர்த்தி செய்தால் மட்டுமே, உங்கள்  முகவரியை புதுப்பிக்க முடியும்

அந்த நிபந்தனைகள் பின்வருமாறு; 

குடியுரிமை மற்றும் முகவரி சரிபார்ப்பு இரண்டின் மொபைல் எண்ணையும் அந்தந்த ஆதார் உடன் இணைக்க வேண்டும்.

முகவரி தளத்தில் பயன்படுத்த முகவரி சரிபார்ப்பு அங்கீகரிக்கப்பட வேண்டும்

எந்த ஆவணங்களும் இல்லாமல் ஆதார் உங்களை ஆதார் அட்டையின் முகவரியை எவ்வாறு புதுப்பிப்பது என்பதற்கான படிகளைப் இங்கு பார்க்கலாம். 

'சீக்ரெட் கோட் வழியாக முகவரியைப் புதுப்பிக்கவும்’ என்பதைக் கிளிக் செய்து, முகவர் சரிபார்ப்பு செய்யவுள்ள ஆதார் எண்ணை உள்ளிடவும். இப்போது நீங்கள் ஒரு SRN- சேவை கோரிக்கை எண்ணைப் பெறுவீர்கள்.

இப்போது உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து, உங்கள் ஆதார் எண்ணை அதில் வழங்குகவும். 

இதற்குப் பிறகு, ஒரு முறை கடவுச் சொல்லுடன் (OTP உடன்)  இரண்டாவது முறையாக உங்களுக்கு எஸ்எம்எஸ் வரும். இப்போது  கேப்ட்சாவை நிரப்பி, உங்கள் விபரங்களை சரிபார்க்கவும். இது சரிபார்க்கப்படும்போது, ​​எஸ்எம்எஸ் மூலம் சேவை கோரிக்கை எண் (எஸ்ஆர்என்) கிடைக்கும்.

சரிபார்ப்பால் வழங்கப்பட்ட அனுமதிக்கான உறுதிப்படுத்தலை அடைந்த பிறகு, உங்களுக்கு கொடுக்கப்பட்ட எஸ்ஆர்என் (SRN) உடன் உள்நுழைந்து, முகவரியை மதிப்பாய்வு செய்து, அதைத் திருத்தி கோரிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.

இரகசிய குறியீட்டைக் கொண்ட முகவரி சரிபார்ப்புக் கடிதத்தை ஒரு போஸ்ட் மூலம் பெறுவீர்கள். SSUP போர்ட்டலில் உள்நுழைந்து ரகசிய குறியீடு வழியாக உங்கள் முகவரியைப் புதுப்பிக்கவும். புதிய முகவரியை மதிப்பாய்வு செய்து உங்கள் இறுதி கோரிக்கையை சமர்ப்பிக்கவும். நீங்கள் சமர்ப்பித்த விண்ணப்பத்தின் நிலையை சரிபார்க்க,  நீங்கள் ஒரு யுஆர்என் எண் பெறுவீர்கள்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  " ( https://t.me/ietamil )

Aadhaar Card Aadhar Update Aadhar Card Aadhaar Uidai Aadhaar Aadhaar Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment