Advertisment

Aadhaar - Voter ID linking: ஆன்லைன் மூலம் வாக்காளர் அட்டையுடன் ஆதார் இணைப்பது எப்படி?

Election Commission of India has decided to integrate Voter ID with Aadhaar card| வீட்டிலிருந்தபடியே ஆன்லைன் மூலம் வாக்காளர் அடையாள அட்டையை ஆதார் அட்டையுடன் இணைப்பது எப்படி என்பது குறித்து இங்கு பார்ப்போம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Aadhaar - Voter ID linking: ஆன்லைன் மூலம் வாக்காளர் அட்டையுடன் ஆதார் இணைப்பது எப்படி?

Aadhaar - Voter ID link

வாக்காளர் அடையாள அட்டையை ஆதார் அட்டையுடன் இணைக்குமாறு இந்திய தேர்தல் ஆணையம் (ECI) அறிவுறுத்தி வருகிறது. வாக்காளர்கள் தங்களது வாக்காளர் அடையாள அட்டையை ஆதாருடன் இணைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். கடந்த ஆண்டு டிசம்பரில் நாடாளுமன்றத்தில் இதற்கான சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது. தேர்தல் சட்டங்கள் (திருத்தம்) 2021 என்ற சட்ட திருத்த மசோதா கொண்டு வரப்பட்டது. இததைத் தொடர்ந்து அனைத்து மாநிலங்களிலும் தேர்தல் ஆணையத்தின் மூலம் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

Advertisment

வாக்காளர் அடையாள அட்டையை, ஆதாருடன் இணைப்பதன் மூலம் தேர்தலில் பலமுறை வாக்களிப்பது, ஒருவர் பல தொகுதிகளில் வாக்காளர் அடையாள அட்டை வைத்திருப்பது போன்றவை தடுக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

அதேசமயம், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் இணைப்பது கட்டாயம் இல்லை என்றும் ஆதாருடன் இணைக்கப்படாத நிலையிலும், வாக்காளர் பட்டியலில் இருந்து எந்த ஒரு வாக்காளர் பெயரும் நீக்கப்பட மாட்டாது எனவும் தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது.

தொடர்ந்து, வாக்காளர் அடையாள அட்டையை ஆதார் அட்டையுடன் இணைக்க விரும்புவர்கள் வீட்டிலிருந்தபடியே ஆன்லைன் மூலம் இணைக்கலாம். எப்படி செய்வது எப்படி குறித்து இங்கு பார்ப்போம்.

  1. உங்கள் போனில் கூகுள் பிளே ஸ்டோர், ஆப்பிள் ஆப் ஸ்டோரிலிருந்து 'Voter Helpline app' ஆப் டவுன்லோடு செய்து கொள்ள வேண்டும்.
  2. ஆப் ஆப்பன் செய்தவுடன் முன் பக்கத்தில் ‘I Agree’ என வரும், அந்த ஆப்ஷனை கிளிக் செய்து, ‘Next’ கொடுக்க வேண்டும்.
  3. அடுத்து ‘Voter Registration’ என்ற ஆப்ஷனை செலக்ட் செய்ய வேண்டும்.
  4. அதில், Electoral Authentication Form (Form 6B) படிவத்தை தேர்வு செய்து கிளிக் செய்ய வேண்டும்.
  5. படிவத்தை தேர்வு செய்து 'Lets Start' கொடுங்கள்.
  6. மொபைல் எண் கேட்கப்படும். அதாவது உங்கள் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண்ணை இங்கு குறிப்பிட வேண்டும்.
  7. மொபைல் எண் கொடுக்கப்பட்ட உடன் OTP அனுப்பப்படும். அதனை பதிவிட்டு, ‘Verify’ கொடுக்க வேண்டும்.
  8. அதன் பின் 'Yes I Have Voter ID' கிளிக் செய்து, ‘Next’ கொடுங்கள்.
  9. இப்போது, உங்கள் வாக்காளர் அடையாள அட்டையின் எண் (EPIC) பதிவிட்டு, மாநிலத்தை தேர்வு செய்து, ‘Fetch details’ கொடுக்கவும்.
  10. ‘Proceed’ ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
  11. தொடர்ந்து ஆதார் எண், மொபைல் எண் கொடுத்து 'Done' ஆப்ஷன் கொடுங்கள்.
  12. அவ்வளவு தான், உங்களுடைய ‘Process' முடிவடைந்து FORM- 6B படிவத்தின் பக்கம் காண்பிக்கப்படும். திருத்தங்கள் ஏதேனும் இருந்தால் மாற்றி, இறுதியில் 'Confirm' எனக் கொடுக்க வேண்டும். வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் இணைக்கும் ‘Process' முடிவடைந்து விடும்.
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment