Advertisment

Aarogya Setu App: மத்திய அரசு ஊழியர்களுக்கு கட்டாயம்; டவுன்லோடு செய்வது எப்படி?

Aarogya Setu app : அனைத்து மத்திய அரசு அதிகாரிகளும் தங்களது கைபேசியில் Aarogya Setu ஆப்பை பயன்படுத்துவதை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
aarogya setu app must for govt employees,what is aarogya setu app,how to download arogya setu app,aarogya setu app download,download aarogya setu app,government measures against coronavirus,what's Aarogya Setu app,Aarogya Setu app for android,Aarogya Setu news, Aarogya Setu news in tamil, Aarogya Setu latest news, Aarogya Setu latest news in tamil

aarogya setu app must for govt employees,what is aarogya setu app,how to download arogya setu app,aarogya setu app download,download aarogya setu app,government measures against coronavirus,what's Aarogya Setu app,Aarogya Setu app for android,Aarogya Setu news, Aarogya Setu news in tamil, Aarogya Setu latest news, Aarogya Setu latest news in tamil

Aarogya Setu app: அனைத்து மத்திய அரசு அதிகாரிகளும் தங்களது கைபேசியில் Aarogya Setu ஆப்பை பயன்படுத்துவதை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. மத்திய அரசில் பணிபுரியும் அதிகாரிகள், பணியாளர்கள் (தற்காலிக ஊழியர்கள் உட்பட) அனைவரும் 'Aarogyasetu' ஆப்பை உடனடியாக தங்களது கைபேசியில் பதிவிறக்கம் செய்ய வேண்டும். அலுவலகத்துக்கு கிளம்ம்புவதற்கு முன்பு, அவர்கள் தங்களுடைய நிலையை (status) 'Aarogyasetu' ஆப்பில் review செய்ய வேண்டும். பாதுகாப்பு ('safe') அல்லது குறைந்த ஆபத்து ('low risk') என்று ஆப் காட்டிய பிறகு தான் பயணிக்க வேண்டும், என மத்திய அரசு சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Advertisment

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ

ஒருவேளை ஆப், நடுத்தரமான ('moderate') அல்லது அதிக ஆபத்து ('high risk') என காண்பித்தால் ---சமீபத்தில் தொடர்பு கொண்ட நபரின் (contacted person) Bluetooth அருகாமையை அடிப்படையாக கொண்டு கணக்கிடப்படுகிறது--- பணியாளர்கள் அலுவலகத்துக்கு வர வேண்டாம் எனவும் 14 நாட்கள் அல்லது ஆப் ’பாதுகாப்பு’ அல்லது ’குறைந்த ஆபத்து’ என காண்பிக்கும் வரை சுய தனிமைப்படுத்திக் கொள்ளும்படியும் அறிவுறுத்தப்படுவதாக, இணை செயலாளர் ஜி ஜெயந்தி பிறப்பித்த உத்தரவு தெரிவிக்கிறது. அனைத்து இணை செயலாளர்கள், அமைச்சக துறைகள், அனைத்து சுயாட்சி (autonomous) மற்றும் statutory அமைப்புகள், பொதுத் துறை நிறுவனங்கள் இந்த உத்தரவு கண்டிப்பாக பின்பற்றப்படுவதை உறுதிபடுத்துமாறு கூறப்பட்டுள்ளது.

தவிர, மாநில அரசுகள் Aarogya Setu ஆப்பை மிகவும் பாராட்டுவதாகவும் feature phones களுக்கு இது போன்ற ஒரு தீர்வு விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது. தனியார் e-commerce நிறுவன ஊழியர்களும் 'Aarogya Setu' ஆப்பை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தவும் பிற சமூக விலகல் விதிகளை பின்பற்றவும் கேட்டுக்கொண்டுள்ளது.

Aarogya Setu app என்றால் என்ன?

நாட்டில் கோவிட் -19 பரவலின் தடமறிய (track) மத்திய அரசு Aarogya Setu ஆப்பை ஏப்ரல் 3 ஆம் தேதி அறிமுகப்படுத்தியது. தங்கள் பகுதியில் யாருக்காவது கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் இந்த ஆப் மக்களை எச்சரிக்கும். Aarogya Setu ஆப்பின் தற்போதைய பதிப்பு முதன்மையாக ஸ்மார்ட் கைபேசிகளுடன் மட்டுமே பொருந்தக்கூடியது.

இந்த ஆப்பை எவ்வாறு நீங்கள் பதிவிறக்கம் செய்யலாம்.

Step 1: Play Store க்கு சென்று Aarogya Setu ஆப்பை தேடவும்.

Step 2: Install என்பதை சொடுக்கவும்

Step 3: ஆப் நிறுவப்பட்டவுடன் மொழியை தேர்ந்தெடுக்கவும்

Step 4: Bluetooth மற்றும் location ஐ ஸ்விட்ச் ஆன் செய்யவும்

Step 5: "location sharing" எப்பொதும் (always) என்று Set செய்யவும். Location data அரசுக்கு அனுப்பப்படும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Corona Virus Covid 19
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment