Advertisment

நீங்கள் விரும்பிய சேனல்களுக்கு மட்டுமே கட்டணம்: பிப்ரவரி 1 முதல் என்னென்ன மாற்றங்கள் தெரியுமா?

வாடிக்கையாளர்களுக்கு அதற்கான தொகையை மட்டும் செலுத்தி பயனடையலாம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
new DTH rules

new DTH rules

கேபிள் டிவி மற்றும் டிடிஎச் சேவைகளில் நமக்கு தேவைப்படும் சேனல்களுக்கு மட்டும் பணம் செலுத்தி பார்த்துக் கொண்டால், அதற்கான கட்டணம் குறைவாக இருக்கும் என்று இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (ட்ராய்) கேபிள் டிவி ஒழுங்குமுறை சட்டத்தை கொண்டு வந்தது.

Advertisment

இனிமேல் வாடிக்கையாளர்கள், தாங்கள் விரும்பி பார்க்கும் சேனல்களுக்கு மட்டும் கட்டணங்கள் செலுத்தினால் போதும் என்று டிராய் தெரிவித்திருந்தது. இந்த நடைமுறை, பொதுமக்கள் தங்களுக்கு விருப்பமான சேனல்களை மட்டும் தேர்வு செய்து பார்க்க வகை செய்கிறது. இதனால், தாங்கள் பார்க்காத சேனல்களுக்கும் சேர்த்து கட்டணம் செலுத்துவதில் இருந்து அவர்கள் விடுபடுவார்கள். அவர்களின் கேபிள் கட்டண செலவு குறையும் என்று கருதப்பட்டது.

பொதுமக்கள் தாங்கள் விரும்பிய சேனல்களை தேர்ந்தெடுக்க கால அவகாசம் ஜனவரி 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. அதாவது ஜனவரி 31 ஆம் தேதிக்குள் வாடிக்கையாளர்களுக்கு தங்களது கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் அல்லது டிடிஎச் சேவை வழங்குபவர்களிடம் தங்களுக்கு விருப்பமான சேனல்களை தேர்ந்தெடுத்து அதற்கான கட்டணத்தை செலுத்திவிட்டால் வழக்கம் போல் சேன்ல்களை கண்டு ரசிக்கலாம்.

அதுவரை, தற்போதைய டி.டி.எச். பிளான்கள் அனைத்தும் அப்படியே நீடிக்கும். எம்.எஸ்.ஓ.க்களுக்கு எந்த சேனல் நிர்வாகமும் சிக்னலை துண்டிக்கக்கூடாது. என கூறப்பட்டுள்ளது.இத்துடன் கேபிள் டிவி வாடிக்கையாளர்கள் இப்போதே தங்கள் கேபிள் ஆபரேட்டர்களை தொடர்பு கொண்டு, தேவையான கட்டண சேனல்களை மட்டும் பார்க்கும் வகையில் செட்-ஆப் பாக்சில் மாற்றங்கள் செய்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுருத்தப்பட்டது.

மேலும் செட் ஆப் பாக்ஸ் இல்லாத கேபிள் இணைப்புகளில் சேனல்கள் வழங்க தடை செய்யப்பட்டுள்ளது.

new DTH rules  : டிடிஎச் சேவைகள் வசூலிக்கும் கட்டண முறைகள்!

ஏர்டெல் டிஜிட்டல்:

இந்தி, ஆங்கில பொழுதுபோக்கு சேனல்கள், மியூசிக் சேனல்கள், ஸ்போர்ட்ஸ் சேனல்கள், குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு சேனல்கள், மலையாளம், மராத்தி, தெலுங்கு மற்றும் இதர மொழி சார்ந்த சேனல்கள் உள்ளன. வாடிக்கையாளர்கள் தங்களுக்கு பிடித்தமான பேக்குகளை தாங்களே தேர்வு செய்து கொள்ளலாம் .

இந்த பேக்கானது ஒரு மாதத்திற்கானது. அடிப்படை பேக்கிற்கான கட்டணம் 150 மட்டுமே. ஹிந்தி எச்.டி. சேனல்களான ஸ்டார் பிள, ஸ்டார் பாரத், ஜீ டிவி ஆகியவற்றை பார்க்க விரும்பினால் அதற்கு மாதத்திற்கு தனியாக 22 ரூபாய் கட்ட வேண்டும். லே ப்ளக்ஸ் சேனலுக்கு ரூபாய் 5.90 மட்டுமே கட்டணம். ஜீ ஸ்டுடியோவிற்கு 22.42 ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும்.

ஏர்டெலின் மேஜிக் எச்.டி. ROI பேக்கின் விலை 93 ரூபாய் ஆகும். அதில் ஸ்டார் ப்ளஸ், ஸ்டார் கோல்ட், ஜீ சினிமா, சோனி, நேசனல் ஜியாகிரபி, ஸ்டார் ஸ்போர்ட்ஸ், மற்றும் குறிப்பிட்ட பெங்காலி மராத்தி சேனல்களை பார்த்துக் கொள்ளலாம்.

டிஷ்டிவி:

தமிழ், மலையாளம், கன்னடம் போன்ற பிராந்திய மொழி சேனல்களையும், குழந்தைகளுக்கான சேனல்கள், லைஃப் ஸ்டைல் மற்றும் பேஷன் சேனல்களுக்கான கட்டணங்களை வெளியிட்டிருக்கிறது.

ஸ்டார் ப்ளஸ் மற்றும் கலர்ஸ் தொலைக்காட்சிகளுக்கான கட்டணம் 19 ரூபாய். சோனி, சாப் எச்.டி, ஸ்டார் மூவிஸ் எச்.டி சேனல்களுக்கும் 19 ரூபாய் கட்டணம். மேக்ஸ் எச்.டி – 17 ரூபாய். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் இந்தி 19 ரூபாய் ஆகும்.

இதே போன்று நீங்கள் பின்பற்றும் ஒவ்வொரு டிஷ் சேனல்கள் மற்றும் செட்டாப் பாக்ஸூகளுக்கு வெவ்வேறான கட்டணங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. நீங்கள் விரும்பிய சேன்ல்களின் கட்டணங்களின் மதிப்புகள் அந்த சேன்ல்களிலே விளம்பரமாகவும் ஒளிப்பரப்படுகின்றன.

எனவே, வாடிக்கையாளர்களுக்கு அதற்கான தொகையை மட்டும் செலுத்தி பயனடையலாம்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment